Monday, November 30, 2015

• கைதிகள் விடுதலைகோரி தற்கொலை செய்த மாணவனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

• கைதிகள் விடுதலைகோரி தற்கொலை செய்த மாணவனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்
அன்று ராஜீவ் காந்தி வழக்கு கைதிகளை விடுதலை செய்யுமாறு செங்கொடி தன் உயிர் கொடுத்தாள்.
இன்று தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு செந்தூரன் தன் உயிரை கொடுத்துள்ளான்.
இந்திய அரசு எப்படி செங்கொடியின் மரணத்தை மதிக்கவில்லையோ அதுபோல் இலங்கை அரசும் செந்தூரனின் மரணத்தை மதிக்கப்போவதில்லை.
அகிம்சையை போதித்த காந்தியை "தேசபிதா" என்று சொல்லும் இந்தியாவில்தான் மணிப்பூர் இசோராம் சார்மிளா 15 வருடங்களாக உண்ணாவிரதம் இருக்கிறார்.
அன்பு வழியை போதித்த புத்தரின் வழியை பின்பற்றுவதாக கூறும் இலங்கையில்தான் தமிழ் அரசியல் கைதிகளின் கண்கள் தோண்டப்பட்டு புத்தரின் காலடியில் போடப்பட்டது.
புத்தரின் போதனையை பின்பற்றுவதாக கூறும் மகிந்த ஆட்சியில்தான் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
அறவழியை இலங்கை இந்திய அரசுகள் மதிக்கப்போவதும் இல்லை. அதனால் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கப்போவதுமில்லை.
மாணவன் செந்தூரன் தற்கொலை செய்துள்ளான். அவனுக்காக மாணவர்கள் போராடுகின்றனர். ஆனால் மக்களின் வாக்கு பெற்ற தலைவர்கள் தங்களுக்கு சொகுசு வாகனம் கேட்டு போராடுகிறார்கள்.
தமிழகத்தில் முத்தக்குமாரின் மரணம் எப்படி ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளால் சீரழிக்கப்பட்டதோ அவ்வாறே மாணவன் செந்தூரன் மரணம் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களால் சீரழிக்கப்படும்.
அகிம்சை வழி போராட்டங்கள் தீர்வு பெற உதவாது என்பதை மாணவன் செந்தூரன் மரணம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.

No comments:

Post a Comment