Monday, November 30, 2015

சோசலிசம்-2015 இலங்கைப் பிரச்சனை குறித்த அமர்வு

சோசலிசம்-2015
இலங்கைப் பிரச்சனை குறித்த அமர்வு
லண்டனில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் "சோசலிசம் - 2015" நிகழ்வு இடம்பெற்றது. பல்வேறு சோசலிச அமைப்புகள் மற்றும் அபிமானிகள் இதில் கலந்துகொண்டனர். வருடா வருடம் நடைபெற்றுவரும் ஒரு முக்கிய நிகழ்வு இது.
இதில் தமிழ் சொலிடாறிற்றி சார்பில் இலங்கைப் பிரச்சனை குறித்த அமர்வு 07.11.15 யன்று மாலை 3 மணிக்கு இடம்பெற்றது.
தோழர் கீhத்திகன் நிகழ்வை வழிநடத்தினார். தோழர் இசைப்பிரியா சிறப்புரையாற்றினார்.
தோழர் கஜன் அவர்களும் தோழர் பாரதி அவர்களும் தமிழ் சொலிடாறிற்றி பற்றியும் அதன் பணிகள் பற்றியும் விளக்கினார்கள்.
தமிழ் சொலிடாறிற்றியைச் சேர்ந்த ஜனகன் அவர்கள் பேசும்போது தான் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் தன் விடுதலைக்கு தமிழ்சொலிடாறிற்p ஆற்றிய பணியை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
மதன் என்ற ஈழத் தமிழர் தற்போது கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்படவிருக்கிறார். அவருடைய விடுதலைக்காகவும் தமிழ்சொலிடாறிற்றி பங்காற்றுகிறது. அதன் இத்தகைய பணிகள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.
இறுதியாக தோழர் சேனன் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அவர் தனது உரையில் இலங்கைப்பிரச்சனையை மற்ற சமூகங்களின் மத்தியில் தமிழ் சொலிடாறிற்றி கொண்டு செல்வது பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
இன்னும் சில வருடங்களில் தமிழ் சொலிடாறிற்றியின் தாக்கத்தை தமிழ் சமூகம் நிச்சயம் உணர்ந்துகொள்ளும் என்பதை இவ் நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

No comments:

Post a Comment