Monday, November 30, 2015

"பயங்கரவாதம்" என்றால் என்ன?

• "பயங்கரவாதம்" என்றால் என்ன?
• அதனை தீர்மானிப்பவர்கள் யார்?
பிரான்ஸ் சிரியாவில் குண்டு போடலாம். அதில் பல ஆயிரம் அப்பாவிகள் சாகலாம். அது பயங்கரவாதம் இல்லை. ஆனால் அதற்கு பதிலடியாக யாராவது பிரான்சில் தாக்குதல் நடத்தி அதில் 150 பேர் இறந்தால் அது பயங்கரவாதம் என்கிறார்கள்.
இந்திய ராணுவம் இலங்கையில் பல்லாயிரம் தமிழர்களை கொல்லலாம். அது பயங்கரவாதம் இல்லை. ஆனால் அதற்கு தண்டனையாக ராஜீவ்காந்தியை யாராவது கொன்றால் அது கொடிய பயங்கரவாதம் என்கிறார்கள்.
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது பயங்கரவாதம் இல்லையாம். ஆனால் பிரான்சில் 150 பேர் கொல்லப்பட்டது கொடிய பயங்கரவாதம் என்று மகிந்த ராஜபக்ச வருத்தம் தெரிவிக்கின்றார்.
இந்தியாவில் பல முஸ்லிம்களை கொன்றது பயங்கரவாதம் இல்லை என்று கூறும் பிரதமர் மோடி பிரான்சில் 150 கொல்லப்பட்டது மன்னிக்கப்பட முடியாத பயங்கரவாதம் என கண்டிக்கிறார்.
ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது குண்டுவீசி பல குழந்தைகளைக் கொன்ற அமெரிக்கா அதனை பயங்கரவாதம் என ஒத்தக் கொள்ளவில்லை. ஆனால் பிரான்சில் 150 பேர் கொல்லப்பட்டது கொடிய பயங்கரவாதம் என அது கூறுகிறது.
அரச பயங்கரவாதமே தனிநபர் பயங்கரவாதத்தை தோற்றுவிக்கின்றது. இரண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.
அரச பயங்கரவாதமும் தனிநபர் பயங்கரவாதமும் ஒன்றின் வளர்ச்சிக்கு மற்றொன்று உதவி வருகிறது. இரண்டுமே மக்கள் நலனுக்கு எதிரானவை.
இன்னொரு இனத்தின் ஜனநாயகத்தை அங்கீகரிக்காத எந்த இனமும் தான் ஜனநாயத்தை அனுபவிக்க முடியாது.
இது சிங்கள இனத்திற்கு மட்டுமல்ல பிரான்ஸ் நாட்டிற்கும் பொருத்தமானதே!
சிரியாவில் கண்டு வீசும் பிரான்ஸ் தனது நாட்டில் குண்டு வெடிப்பதை ஒருபோதும் தடுக்க முடியாது.
சிரியாவின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் பிரான்ஸ் தான் அமைதியாக ஒருபோதும் இருக்க முடியாது.
வினையை விதைத்தவர்கள் திணையை அறுவடை செய்ய விரும்ப முடியாது!

No comments:

Post a Comment