Monday, November 30, 2015

முன்னிலை சோசலிசக்கட்சி தலைவர் தோழர் குமார் குணரட்ணம் கைது!

•முன்னிலை சோசலிசக்கட்சி தலைவர் தோழர் குமார் குணரட்ணம் கைது!
மகிந்தவின் பாதையில் செல்ல முனையும் மைத்திரியின் "நல்லாட்சி" அரசு!!
முகம் மாற்றம் தேவையில்லை. அமைப்பு மாற்றமே தேவை என ஜனாதிபதி தேர்தலில் வலியுறுத்திய முன்னிலை சோசலிசக்கட்சியின் தலைவர் தோழர் குமார் குணரட்ணம் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மகிந்த ஆட்சிக் காலத்தில் தோழர் குமார் குணரட்ணம் கைது செய்யப்பட்டு நாடு கடத்;தப்பட்டார். இன்று மைத்திரி ஆட்சியிலும் நாடு கடத்துவதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மகிந்தவின் பாதையிலே மைத்திரியும் செல்கிறார் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
ஒருபுறம் வெளிநாட்டிற்கு சென்ற இலங்கையர்களை திரும்பி வருமாறு அழைப்பு விட்டுக்கொண்டு மறுபறம் அவ்வாறு திரும்பிவந்த தோழர் குமார் குணரட்ணத்தை கைது செய்திருப்புது நல்லாட்சி அரசின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகின்றது.
பல்லாயிரம் தமிழ்மக்களை கொன்ற மகிந்த ராஜபக்ச இன்னும் கைது செய்யப்படவில்லை.
வெள்ளைவான் புகழ் கோத்தபாயா ராஜபக்ச இன்னும் கைது செய்யப்படவில்லை.
பலகோடி ருபாய்களை ஊழல் செய்த நாமல் ராஜபக்ச இன்னும் கைது செய்யப்படவில்லை.
போலி கடவுச்சீட்டு விமல் வீரவம்ச உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்படுகிறார்.
ஆனால் மக்களுக்காக போராடும் தோழர் குமார் குணரட்ணம் தேடிக் கைது செய்யப்படுகிறார்.
தோழர் குமார் குணரட்ணம் ஒரு இலங்கையர். அவர் ஒரு கட்சியின் தலைவர். அவர் ஒரு அமைப்பு மாற்றத்தை எற்படுத்த விரும்புகிறார். எனவே மக்கள் நலனை முன்னிட்டு அவரை இலங்கையில் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும்.
முன்னிலை சோசலிசக்கட்சியும் அதன் சமவுரிமை இயக்கமும் தமிழ் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்கிறது. மாணவர்களின் உரிமைக்காக போராடுகிறது. எனவேதான் அதன் தலைவர் தோழர் குமார் குணரட்ணம் கைது செய்யப்பட்டு பழிவாங்கப்படுகிறார்.
தமிழ் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்த முன்னிலை சோசலிசக்கட்சியின் தோழர்கள் லலித் , குகன் ஆகியோர் கோத்தபாயாவின் வெள்ளைவானில் கடத்தப்பட்டார்கள்.
தமிழ் சிங்கள் உழைக்கும் மக்களின் ஜக்கியத்திற்காக உழைக்கும் முன்னிலை சோசலிசக்கட்சியின் தலைவர் தோழர் குமார் குணரட்ணம் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதனை தமிழ் சிங்கள மக்கள் ஒன்று சேர்ந்து கண்டிக்க வேண்டும். அவரின் விடுதலைக்காக ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.
• இலங்கை அரசே!
தோழர் குமார் குணரட்ணத்தை உடனே விடுதலை செய்!

No comments:

Post a Comment