Sunday, February 16, 2014

• மன்னார் மனித புதைகுழியில் 54 உடல் எச்சங்கள் மீட்பு இந்திய ராணுவத்தால் கொன்று புதைக்கப்பட்டவையா?

• மன்னார் மனித புதைகுழியில் 54 உடல் எச்சங்கள் மீட்பு
இந்திய ராணுவத்தால் கொன்று புதைக்கப்பட்டவையா?

• படுகொலைகளுக்காக ராஜீவ் காந்தி அரசு விசாரிக்கபபடுமா?
பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு கிடைக்குமா?

• ராஜீவ்காந்தி கொலைக்கு தண்டனை வழங்கு முன்னர்
ராஜீவ் காந்தியால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்குவார்களா?

மன்னாரில் புகழ் பெற்ற திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் தோண்டப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 54 மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் நீதிபதி முன்னிலையில் தோண்டப் பெற்று வரும் இப் புதைகுழியில் இருந்து மேலும் பல மனித உடல்கள் கிடைக்கப் பெறலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இதுகுறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரியுள்ளார்.

கண்டெடுக்கப்பட்ட உடல்கள் பல அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவை இந்திய ராணுவ காலத்தில் காணாமல் போனவர்களின் உடல்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளன. இவை இந்திய ராணுவத்தால் கொன்று புதைக்கபட்டவை என்று உறுதி செய்யப்படுகின்றன. இது தொடர்பாக அன்று இந்திய ராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய மண்டையன் குழு தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விரைவில் விசாரிக்கப்படலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய ராணுவத்தின் கொலைகளுக்காக சுரேஸ் பிரேமச்சந்திரன் மட்டும் விசாரிக்கப்பட முடியாது. கொலை செய்த இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் இந்திய ராணுவத்தை அனுப்பிய ராஜீவ் காந்தி எல்லாம் விசாரிக்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரிக்கப்படல் வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நட்ட ஈடும் வழங்க வேண்டும். இதற்காக மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment