Sunday, February 16, 2014

• புலம்பெயர் சமவுரிமை இயக்கம் பதில் கொடுக்குமா?

• புலம்பெயர் சமவுரிமை இயக்கம் பதில் கொடுக்குமா?

சோபாசக்தி அவர்கள் பழ ரிச்சாட் அவர்களை பேட்டி கண்டிருக்கிறார். அதனை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார். அவருக்கு நன்றிகள்.

அந்த பேட்டியை படிக்க விரும்புவோர் கீழ்வரும் இணைப்பில் படிக்கலாம்.

http://www.shobasakthi.com/shobasakthi/?p=1126

சோபாசக்தி அவர்கள் ஒரு புரட்சியாளர் அல்லர். அவர் ஒருபோதும் எந்தவொரு புரட்சிகர இயக்கத்திலும் இருந்தவர் அல்ல. மாறாக தன்னை ஒரு ட்ரொக்சியவாதி என்று பகிரங்கமாக அறிவித்துக்கொண்டவர்.

சோபாசக்தி அவர்கள் மாக்சிய கருத்துக்களை படிப்பதைவிட கால்மாக்ஸ் க்கு பணிப்பெண் கெலன்டெமுத் உடன் உறவு இருந்தது என்றும் அதன் மூலம் அவருக்கு ஒரு ஆண் மகன் பிறந்தது என்றும் கதை விடுவதில் ஆர்வம் உள்ளவர். இதற்குரிய ஆதாரங்களை எனக்கு தருவதாக கூறினார். ஆனால் இன்னும் தரவில்லை.

புரட்சிகர சக்திகள் குறித்து புரட்சியாளர்களே கேள்வி கேட்க முடியும் என்று இல்லை. யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். எனவே சோபாசக்தி அவர்களும் கேட்கலாம். அந்தளவில் சோபாசக்தியின் இந்த கேள்விகள் நிச்சயம் பதில் அளிக்கப்பட வேண்டியவையே.

பழ ரிச்சாட் அவர்கள் ஜே.வி.பி ஒரு இனவாதக் கட்சி என்று கூறுகிறார். ஆனால் இதை பல வருடங்களுக்கு முன்னரே தோழர் சண்முகதாசன் கூறிவிட்டார். அதுமட்டுமல்ல தோழர் சண்முகதாசன் அவர்கள் ஜே.வி.பி குறித்து தனது “ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் புத்தகத்தில் தனி ஒரு அத்தியாயமே எழுதியுள்ளார். அதற்கு ஜே.வி.பி இன்னும் பதில் தரவில்லை.

பழ ரிச்சாட் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து சமவுரிமை இயக்கம் நிச்சயம் பதில் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுப்பார்கள் என நம்புகிறேன்.

பழ ரிச்சாட் அவர்களிடம் ஒரு வேண்டுகோள்!

நீங்கள் தற்போது சேர்ந்து செயற்படும் ஈரோஸ் இயக்கம் 1986ல் இந்திய உளவுப்படைகளின் வேண்டுகோளின்படி தோழர் நெப்போலியனை மலையகத்தில் கொலை செய்தது ஏன் என்பதை கேட்டு சொல்வீர்களா?

ஒருவேளை அதற்குரிய பதிலை உங்களால் பெற முடியாவிடினும் எதிர்வரும் காலங்களில் இந்திய உளவுப்படையின் வேண்டுகோள்படி யாரையும் கொலை செய்யமாட்டேன் என்ற உத்தரவாதத்தையாவது நீங்கள் தருவீர்களா?

No comments:

Post a Comment