Wednesday, July 24, 2013

இந்தியா வளர்கிறது ! வல்லரசாகிறது !!

இந்தியா வளர்கிறது !
வல்லரசாகிறது !!

ஒருபுறம் இந்தியா வளர்கிறது, வல்லரசாகிறது என்கிறார்கள். மறுபுறம் அறியாமைகளும் மூட நம்பிக்கைகளும் அரச ஆதரவுடன் அரங்கேற்றப்படுகிறது.

திராவிடக்கட்சியின் பேரால் ஆட்சியில் இருக்கும் ஜெயா அம்மையார் தமிழ்நாடு அரசின் சார்பாக மழை வேண்டி யாகம் செய்கிறார். ஒரு அரசே யாகம் செய்வது எவ்வளவு வெட்கக்கேடானது. இத்தனைக்கும் தமிழ்நாடு பெரியார் பிறந்த மண் மட்டுமல்ல இன்றைய அரசு திராவிடக் கட்சியாம். அதுமட்டுமல்ல இந்தியா மதசார்பற்ற நாடு என்று வேறு பீற்றிக்கொள்கிறார்கள்.

ராக்கட் ஏவுமுன்னர் திருப்பதியில் யாகம் செய்கிறார்கள். விமானம் பறக்கு முன்னர் தேங்காய் உடைத்து பூசை செய்கிறார்கள். இது பகுத்தறிவுக்கு விரோதமானது மட்டுமல்ல இந்த வெற்றிகளுக்காக உழைத்த விஞ்ஞானிகளையும் கேவலப்படுத்துகிறார்கள்.

அண்மையில் கோர்த்னட் யாத்திரையில் பல ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து போனார்கள். அவர்களை காப்பாற்ற ஆண்டவன் வரவில்லை. ஆள்பவர்களே வந்தார்கள். ஆனால் முட்டாள் பக்த கோடிகளோ கடவுளே அவர்கள் ரூபத்தில் வந்ததாக வியாக்கியானம் செய்கிறார்கள். என்ன செய்வது?

இதோ கீழே உள்ள படத்தை பாருங்கள். ஒரு மனநோய் உள்ள மனிதன் நிர்வாணமாக செல்கிறான். அவனை சாமி என மக்கள் வழிபடுகிறார்கள். ரோட்டில் ஒரு சாதாரண மனிதன் ஆடையின்றி திரிந்தால் உடனே கைது செய்யும் பொலிஸ் இங்கு ஒரு கூட்டமே திரிவதை பாதுகாப்பு கொடுத்து வேடிக்கை பார்க்கிறது. நிர்வாணமாக திரியும் இந்த சாமியை உடனே மருத்துமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதோடு அவருக்கு உடுப்பும் வழங்க உச்ச நீதிமன்றமாவது முன்வருமா?

ஆளும் வர்க்கம் தனது நன்மைகளுக்காக மக்களின் மூடநம்பிக்கைகளை பயன்படுத்துகிறது. அதனை காட்டிக் காக்கிறது. ஏன் பல கோடி செலவு செய்தும் வளர்த்து வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்குரிய பணிகளை பகுத்தறிவுவாதிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

ஒரு பெரியார் மட்டுமல்ல ஓராயிரம் பெரியாரின் அவசியம் தற்போது உணரப்படுகிறது.

http://www.youtube.com/watch?v=oaxlx7BZ-Zk&feature=share

1 comment:

  1. நல்ல பதிவு தொடரட்டும் ! நல்ல முயற்சி ........இந்த சமூகம் முன்னிலிருந்து இன்று வரை எல்லாம் மாறிவருகிறது ! மாற்றம் தடுக்க முடியாதது ,மாறிக்கொண்டே இருக்கும் ...என்ன ? தானாய் எல்லாம் மாறும் என்று வாளாய் இருப்பது புரட்சிகர வாதிககளின் நிலையன்று ..... மாற்றத்தை இன்னும் ...இன்னும் வேகபடுத்தத்வே முயன்று வருகின்றனர் .அதில் தங்களைபோன்றோரின் பங்களிப்போ தவிர்க்க இயலாதது !

    ReplyDelete