Wednesday, October 30, 2013

தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் 14 வது நிகழ்வு

லண்டனில் ஈஸ்ட்காமில் நேற்று (26.10.2013) தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் 14 வது நிகழ்வு மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

முதலாவது அமர்வாக ஜெய்சன் அவர்களின் கவிதைத் தொகுதி அறிமுகம் செய்யப்பட்டது. அதில் சபேஸ் சுகுணசபேசன் தலைமையில் கவுன்சிலர் போல் சத்தியநேசன், அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் மற்றும் கிரகாம் வில்லியம்சன் ஆகியோர் உரையாற்றினார்கள். இறுதியில் நூல் ஆசிரியர் ஜெய்சன் ஏற்புரையும் நன்றியுரையும் வழங்கினார்.

சிறிய இடைவேளையின் பின்னர் இரண்டாவது அமர்வாக காலம் சென்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர் சுனிலா அபேசேகர அவர்களின் நினைவும் பங்களிப்பும் குறித்து சார்ல்ஸ் அந்தனிதாஸ் தலைமையில் சரிநிகர் ஆசிரியர் சிவகுமார் உரையாற்றினார்.

மாலை 9.00 மணியளவில் நிகழ்வுகள் முடிவுற்றன. அண்மைய காலங்களில் இடம்பெற்ற புத்தக வெளியீடுகளில் மிகவும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட நிகழ்வாக இது இடம்பெற்றது பாராட்டுக்குரிய அம்சமாகும். ஆனால் பங்கு பற்றிய மக்களில் பெரும்பாலானோர் அதுவும் குறிப்பாக மனித உரிமைக்காக அதிகம் குரல் கொடுக்கும் வரதகுமார் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சுனில் அபேசேகரவின் நிகழ்வில் கலந்து கொள்ள அக்கறை காட்டாமையானது மிகவும் துரதிருஸ்டவசமானது.

எமக்காக சிங்கள மக்கள் குரல் கொடுப்பதில்லை என ஒருபுறம் கூறிக்கொள்கிறோம். மறுபுறம் அவ்வாறு குரல் கொடுக்கும் சுனில் அபேசேகர போன்றவர்களை நினைவு கூர தயங்குகிறோம். இனியாவது இந்த நிலை மாற வேண்டும்.

No comments:

Post a Comment