Wednesday, October 30, 2013

• மீரா பாரதியின் “மரணம் இழப்பு மலர்தல்” நூல் வெளியீடு

• மீரா பாரதியின் “மரணம் இழப்பு மலர்தல்” நூல் வெளியீடு

இன்று (20.10.13) லண்டனில் ஈஸ்ட்காமில் மீராபாரதியின் “மரணம் இழப்பு மலர்தல்” நூல் வெளியீடும் கலந்துரையாடலும் நடைபெற்றது.

பாலசிங்கம் சுகுமார் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. யமுனா ராஜேந்திரன் “மரணம் இன அழிப்பும் அரசியலும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அடுத்து மு. நித்தியானந்தன் “மரணம் அஞ்சலியும் அரசியலும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அதையடுத்து மாதவி சிவலீலன் “மரணம் இழப்பும் பாதிப்புகளும் பெண்களும் குழந்தைகளும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக நூல் ஆசிரியர் மீராபாரதி நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

மீராபாரதி உரையாற்றும்போது தனது தந்தையின் இழப்பும் அதனை தான் ஆற்றுப்படுத்த தான் எதிர் கொண்ட அனுபவங்களுமே இந்த நூலை எழுத தூண்டியது என்றார். எனவே இங்கு அவரின் தந்தை பற்றி சில வரிகள் கூறவேண்டும் என விரும்புகிறேன். அவரது தந்தையார் “கரவை கந்தாமி” என அறியப்பட்டவர். அவர் தோழர் சண்முகதாசனின் கம்யுனிஸ்ட் கட்சியில் முன்னனி தோழராக செயற்பட்டவர். மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்து முழுநேர ஊழியராக செயற்பட்டவர். அவர் எனது ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரைப் பற்றி நான் நன்கு அறிந்திருந்தாலும்கூட அவரை நான் ஒருபோதும் ஊரில் காணவில்லை. 1988ல் கொழும்பில் தோழர் சண்முகதாசனின் இல்லத்திலே அவரைக் கண்டிருக்கிறேன். தோழர் சண்முகதாசனை நான் வீடீயோ பேட்டி கண்டபோது அவரும் அங்கு நின்றிருந்தார். மிகவும் ஆர்வமுடன் அவற்றை பார்த்துக்கொண்டு நின்றார். இறுதியாக தனக்கும் அதில் ஒரு பிரதி தாருங்கள் என்று கேட்டார்.

தோழர் கரவைக் கந்தசாமி தனது இறுதிக்காலங்களில் புளட் இயக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணம் உண்மையில் புரட்சிகர தோழர்கள் மத்தியில் அதிர்சியையும் கடும் துயரத்தையும் கொடுத்திருந்தது.

அதேவேளை மகனாக அவரது அந்த கொடிய மரணத்தை மீராபாரதி எதிர்கொண்ட அனுபவங்களை நூலாக்கியுள்ளார். அது மட்டுமல்ல மீராபாரதி புளட் இயக்கத்தில் செயற்பட்டதாலும் மேலும் யுத்த பூமியில் வாழ்ந்ததாலும் அவர் பல மரணங்களை தன் வாழ்நாளில் சந்திருக்கிறார். அத்தோடு 2009ல் தமிழ் மக்களுக்கு எற்பட்ட பாரிய இழப்புகளும் அவரை இந்த நூலை எழுத தூண்டியிருக்கிறது.

No comments:

Post a Comment