Wednesday, October 30, 2013

• தோழர் பொழிலன் அவர்களை விடுதலை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

• தோழர் பொழிலன் அவர்களை விடுதலை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கு, கிண்டி கத்திபாரா நேரு சிலை வெடிகுண்டு வழக்கு, ஊட்டி பூங்கா வெடி குண்டு வழக்கு என பல்வேறு வழக்குகள் நிமித்தம் கைது செய்யப்பட்ட தோழர்பொழிலனுக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.சென்னை உயர்நீதிமன்றம் இதனை உறுதி செய்தது. அதன் பின்னர் உச்ச நீதிமன்றம் 10 வருடங்களாக தண்டனையை குறைத்தது.

பல வருடங்களாக சென்னை மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தோழர் பொழிலன் அவர்களை விடுதலை செய்யுமாறு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் மகனான தோழர் பொழிலன் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார். அவரை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதன் மூலம் அவரது விடுதலைப் போராட்டத்தை நசுக்கலாம் என இந்திய மத்திய மாநில அரசுகள் கனவு காண்கின்றன.

இதே கொடைக்கானல் வழக்கில்தான் நானும் கைது செய்யப்பட்டேன். எட்டு வருட சிறைவாழ்க்கையின் பின்னர் நீதிமன்றம் என்னை விடுதலை செய்தது. தாமதித்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள். என்னை நீதிமன்றம் விடுதலை செய்த போதும் தமிழ்நாடு அரசு என்னை விடுலை செய்யாமல் சிறையை விடக் கொடிய சிறப்புமுகாமில் அடைத்தது. நான் எனது சொந்த செலவில் இலங்கை திரும்பிச் செல்ல அனுமதிக்குமாறு கோரியும் விடுதலை செய்யாமல் தொடர்ந்தும் என்னை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்தது தமிழக அரசு.

தோழர் பொழிலன் மற்றும் பல தோழர்களின் உதவியாலும் ஆதரவினாலும் நான் சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்டு இந்தியாவை விட்டு நாடு கடத்தப்பட்டேன். அவர்கள் செய்த உதவிகளை நன்றியுடன் நினைவு கூருகிறேன். தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்க அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment