Wednesday, October 30, 2013

• கலைஞர் தத்தெடுத்த அகதி சிறுவன் எங்கே?

• கலைஞர் தத்தெடுத்த அகதி சிறுவன் எங்கே?

• ஸ்டாலின் குடும்பத்தால் அந்த சிறுவன் கொல்லப்பட்டானா?

• அகதி சிறுவனுக்கு நீதி, நியாயம் கிடைக்குமா?

1983களில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்தனர். அதில் ஒரு ஏழை அகதி சிறுவனை தான் தத்தெடுத்து வளர்ப்பதாக கலைஞர் கருணாநிதி அவர்கள் அறிவித்தார். அவருடன் அந்த சிறுவன் நிற்கும் படங்களும் பத்திரிகைகளில் வெளிவந்தன.

ஆனால் தற்போது அந்த சிறுவன் குறித்து எந்த தகவலும் கலைஞர் குடும்பத்திலிருந்து வெளிவருவதில்லை. கலைஞருக்கு பல மனைவிகள். பல பிள்ளைகள். பல பேரப்பிள்ளைகள் என அவரின் குடும்பம் மிகப் பெரியது. இருந்தும் அவர் ஒரு ஏழை அகதி சிறுவனை தத்தெடுத்து தனது கருணை மனதை வெளிப்படுத்தினார். குறிப்பாக ஈழத் தமிழர்கள் மீது தான் கொண்டிருக்கும் அபரிதமான அன்பை இதன் மூலம் அவர் வெளிப்படுத்தினார் என்றே நாம் நம்பினோம்.

எம்.ஜி.ஆர் ஒரு மலையாளி. அதனால் அவருக்கு இலங்கை தமிழர்கள் மீது உண்மையான அன்பு,இரக்கம் இல்லை. ஆனால் கலைஞர் உலகத் தமிழின தலைவர் என்பதால் இவ்வாறு ஒரு அகதி சிறுவனை தத்தெடுத்து தனது தமிழ் உணர்வை நிரூபித்துள்ளார் என அப்போது ஒவ்வொரு தி.மு.க தொண்டனும் பெருமைப்பட்டான்.

இன்று கலைஞரின் பெரிய குடும்ப படங்கள் அடிக்கடி பத்திரிகையில் வெளிவருகின்றன. ஆனால் அதில் ஒன்றில்கூட இந்த ஏழை அகதி சிறுவனைக் காண முடியவில்லை. எதிர்காலத்தில் தங்கள் சொத்தில் பங்கிற்கு அந்த சிறுவன் வந்துவிடுவான் என்ற அச்சத்தில் கலைஞர் குடும்பத்தினர் அந்த சிறுவனை விரட்டிவிட்டார்கள் என அறியவருகிறது.

இது உண்மையாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் அந்த சிறுவன் கலைஞர் குடும்பத்தால் கொல்லப்பட்டுவிட்டான் என சிலர் தெரிவிப்பது எமக்கு மிகவும் கவலைக் கொடுக்கிறது. இது உண்மைதானோ என நினைக்கும் வகையில் இவ்வளவு காலமும் கலைஞர் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த பரிதி இளம்பரிதியும் அந்த சிறுவன் எங்கே என்று கேட்டிருக்கிறார். இது கலைஞர் குடும்பத்தின் மீது சந்தேகத்தை அதிகரிக்கின்றது.

கலைஞர் தன் தமிழ் உணர்வைக் காட்டுவதற்காக அநியாயமாக ஒரு அகதி சிறுவனைப் பலி கொடுத்துவிட்டார் என்றே நினைக்க தோன்றுகிறது. எனவே கலைஞரோ அல்லது தி.மு.க வினர் யாராவது அந்த சிறுவன் உயிரோடு இருப்பதையும் அவன் குறித்த விபரத்தையும் உடன் மக்களுக்கு அறியத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் அறிய தராவிடின் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக போராடும் பலரை நாம் அறிவோம். அவர்கள் இந்த அகதி சிறுவனுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த சிறுவனுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை தமிழ் மக்களுக்கு அறிய தருமாறு அனைவரையும் மிகவும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment