Saturday, April 12, 2014

“யாதும் ஊரே” என்ற ஆவணப் பட திரையிடல் நிகழ்வு

 லண்டனில் ஈஸ்ட்காமில் இன்று (05.04.2014) மாலை 6.00 மணிக்கு “யாதும் ஊரே” என்ற ஆவணப் பட திரையிடல் நிகழ்வு நடைபெற்றது.

வழக்கமான இலக்கிய நிகழ்வுகள் போல் அல்லாது மண்டபம் நிறைந்த மக்களுடன் இவ் நிகழ்வு நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்பாட்டாளர்களுக்கு மிக்க நன்றி.

தமிழில் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் லண்டனில் உள்ள மக்களுக்கு எந்தளவு பயனள்ளதாக அமையும் எனத் தெரியவில்லை. ஏனெனில் ஆங்கிலத்தில் பல ஆவணப்படங்கள் இருக்கின்றன. ஆனால் இலங்கை, இந்தியா போன்ற இடங்களில் உள்ள மக்களுக்கு நிச்சயம் பயன் உள்ளதாக அமையும் என நம்பலாம்.

இந்த ஆவணப்படம் லண்டன் அருங்காட்சியத்தின் வரலாற்றைக் குறிக்கிறதா அல்லது மதங்களின் வரலாற்றைக் குறிக்கிறதா அல்லது அதனூடாக தமிழ் மக்களின் வரலாற்றைக் குறிக்கிறதா என்ற குழப்பம் காணப்படுகிறது. அடுத்து வரும் தொடர்கள் இந்த குழப்பத்தை போக்கும் என நம்பகிறோம்.

மக்களின் வரலாற்றை மதங்களின் வரலாற்றினூடாக பார்ப்பதிலும் அந்த மக்கள் கொண்ட உழைப்பு மற்றும் பயன்படுத்திய உற்பத்திக் கருவிகளினூடாக பார்க்கும் மாக்சியப் பார்வையே சரியான விஞ்ஞானப் பார்வையாகும். இதனை ஆவணப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் கவனத்தில் கொள்வது நல்லது.

அடுத்து கம்போடியாவில் இருக்கும் அங்கவாட கோயில் பற்றி ஆவணப்படம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு அதிக பொருட் செலவு பிடிக்கும். மேலும் அது தற்போது எந்தளவு முக்கியமானது என்பதும் கேள்விக் குறியே. எனவே பயன் உள்ள விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

இந்த ஆவணப் பட தயாரிப்பாளர்கள் லண்டனில் இருப்பதால் இலங்கை மலையக மக்களின் வரலாற்றை ஆவணப்படமாக்குவது சாத்தியமானது, மற்றும் தேவையானதும்கூட என் நாம் கருதுகிறோம்.

இலங்கையில் உள்ள மலையக தமிழ்மக்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள். அவர்கள் சந்தித்த துன்பங்கள் மரணங்கள் ஏராளம். இது கொடிய துன்பியல் வரலாறு. அதனை யாரும் இதுவரை ஆவணமாக்கவில்லை. இது குறித்த பல ஆதாரங்கள் லண்டன் அருங்காட்சியத்தில் உள்ளது. எனவே அதனை ஆவணமாக்கி முன்வைத்தால் அந்த மக்கள் மட்டுமல்ல வரலாறும் நினைவில் கொள்ளும்.

அதனை செய்ய முன்வருவார்களா?

No comments:

Post a Comment