Saturday, April 12, 2014

இனம்” படத்தின் மீதான எதிர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணம்!

• “இனம்” படத்தின் மீதான எதிர்ப்பு
ஒரு தவறான முன்னுதாரணம்!
இது பலவீனத்தின் வெளிப்பாடு!

இலங்கை, இந்திய அரசுகள்
பல திரைப்படங்களை தடை செய்துள்ளன. 
பல நூல்களை தடை செய்துள்ளன.
பல பாடல்களை தடை செய்துள்ளன.
அப்போதெல்லாம் இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றோம்.

இன்று “இனம்” படம் மீது எதிர்ப்பு தெரிவிப்பதும்
அதனை ஓடவிடாமல் தடை செய்வதும் வெட்கக் கேடானது.

எமது இன உணர்வு பலவீனமானது அல்ல. அது மிகவும் பலமானது.
ஓரு “இனம்” மட்டுமல்ல 100 “இனம்” படம் வந்தாலும் அதனை உடைத்துவிடமுடியாது.

ஏன் “இனம்” படத்தை தடை செய்ய வேண்டும்?
ஏன் எங்களால் சிறந்த இன உணர்வுப் படங்களை எடுக்க முடியாது?

கலாச்சாரக் காவலர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.

ஆயிரம் மலர்கள் மலரட்டும்
நூறு கருத்துகள் முட்டி மோதட்டும்.

மக்களுக்கான கலை
மக்களுக்கான இலக்கியம்
மக்களுக்கான சினிமா படைப்போம்.

அதுவே புரட்சியை முன்னெடுக்க துணை செய்யும்.

No comments:

Post a Comment