Saturday, April 12, 2014

தமிழக கட்சிக்கு பிரபாகரன் தலைவராக முடியுமா?

தமிழக கட்சிக்கு பிரபாகரன் தலைவராக முடியுமா?
தமிழக கட்சி தமிழீழம் பெற்றுத் தர முடியுமா?

"ஒரு அடிமை தனது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும்"- தந்தை பெரியார்.

"தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதே தமிழீழ விடுதலைக்கு செய்யும் உதவியாகும்"- தோழர் தமிழரசன்.

விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தமிழக கட்சிகளுக்கு ஒரு ஆசானாக இருக்கலாம். அல்லது வழிகாட்டியாக இருக்கலாம். ஆனால் அவர் ஒருபோதும் தமிழக கட்சிகளுக்கு தலைவராக இருக்க முடியாது. அவரைத் தலைவராக கூறுவது அரசியல் அறிவீனமாகும்.

தமிழீழம் வேண்டுமாயின் அதற்கு ஈழத் தமிழர்களே போராட வேண்டும். அதற்கு தமிழக தமிழர்கள் ஆதரவு தெரிவிக்கலாம். உதவிகள் செய்யலாம். ஆனால் தமிழக கட்சி போராடி தமிழீழம் பெற்று தரப் போவதாக கூறுவது சாத்தியமற்றதாகும்.

தமிழகத்தில் இருந்து தமிழீழத்திற்காக போராட விரும்புவோர் தமிழ்நாடு விடுதலைக்காக போராடலாம். ஏனெனில் தமிழ்நாடு விடுதலை பெற்றால் அடுத்த விநாடியே தமிழீழம் தானாக விடுதலை பெறும் .

• தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்காக போராட விரும்புவோர் தமிழ்நாடு விடுதலையை முன்னெடுக்க தயங்குவது ஏன்?

• தமிழீழ ஆயுதப் போராட்டத்தை ஆதரிப்போர் தமிழ்நாடு விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்க மறுப்பது ஏன்?

• ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த பிரபாகரனை புகழ்பவர்கள் தமிழகத்தில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் தமிழரசன் பெயரைக்கூட உச்சரிக்க தயங்குவது ஏன்?

• முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்தவர்கள் அதில் தோழர் தமிழரசனுக்கு இடம் வழங்க மறுத்தது ஏன்?

“தமிழீழம் உருவானால் அது தமிழக தமிழர்களுக்கு ஒரு எழுச்சியைக் கொடுக்கும். அவர்கள் தனிநாடு கேட்டு போராடுவார்கள். தமிழ்நாடு உடைந்தால் இந்தியா சுக்கு நூறாக உடைந்துவிடும். எனவேதான் இந்தியா தமிழீழம் உருவாக விடாமல் தடுக்கிறது” என்று சிலர் இந்திய தலையீட்டுக்கு விளக்கம் கொடுக்கிறார்கள்.

அவர்களுக்கு நாம், “இலங்கை தமிழர்களைத் தொடர்ந்து இந்திய அரசு நசுக்கினாலும் தமிழகம் கொந்தளிக்கும். தனிநாடு கேட்டு போராட்டம் ஆரம்பிக்கும்” என்பதைக் காட்ட வேண்டும். இதுவே இலங்கையில் இந்திய தலையீட்டை தடுத்து நிறுத்த வழி செய்யும்.

No comments:

Post a Comment