Saturday, July 19, 2014

• தறியுடன்- நாவல் பற்றி

• தறியுடன்- நாவல் பற்றி

நக்சலைட்டுகளின் போராட்டம் குறித்து குறிப்பிடத்தக்க இலக்கிய பதிவு எதுவும் வரவில்லையே என்ற எனது நீண்டநாள் ஏக்கத்தைப் போக்கியிருக்கும் நாவல் இது. ஆம். ரஸ்சிய புரட்சியின் போது வெளிவந்த 'தாய்' , 'வீரம் விளைந்தது' போன்ற நாவல்கள் போன்று இதுவும் தமிழகத்தில் இடம்பெற்ற நக்சலைட்டுகளின் மக்கள் போராட்டங்களை நன்கு காட்டியிருக்கிறது.

இந்த 'தறியுடன்' நாவலை எழுதியிருக்கும் பாரதி நந்தன் மாக்சிய லெனிய மாவோ சிந்தனைகளை வழிகாட்டும் தத்துவமாய் ஏற்று நக்சலைட் இயக்கத்தில் அர்ப்பணிப்புடன் களப்பணி செய்தவர். அவர் தனது அந்த போராட்ட அனுபவங்களையே நாவலாக வடித்துள்ளார். அவரது படைப்பு ஒரு பாட்டாளி வர்க்க புரட்சிகர கலை இலக்கிய படைப்பாகும். அவரது பணி நிச்சயம் பாராட்டுக்குரியது.

மாக்சிய ஆசான்களின் வரிகள் சில இடங்களில் வலிந்து புகுத்தப்பட்டிருப்பது ஒரு பிரச்சார நெடியை வெளிப்படுத்தினாலும் அது ஒரு பெரிய குறையாக தெரியவில்லை. மாறாக அதுவும் இன்றைய சூழலில் அவசியமானதாகவே உள்ளது.

நீண்ட நாவல், அதிக பக்கங்கள் இருப்பினும் படிக்க சோர்வு தரவில்லை. விறு விறுப்பாகவே இருக்கிறது. இது அவரின் எழுத்தின் வெற்றியைக் குறிக்கிறது.

இந்த நாவலை வாங்கிப் படிப்பதன் மூலம் நக்சலைட்டுகளின் மக்கள் போராட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வது மட்டுமல்ல இதுபோன்ற நாவல்கள் தொடர்ந்து வருவதற்கும் ஊக்கம் அளிப்பதாக அமையும்.

Photo: • தறியுடன்- நாவல் பற்றி

No comments:

Post a Comment