Saturday, July 19, 2014

• பத்மநாபா விதைக்கப்பட்டாரா? அல்லது புதைக்கப்பட்டாரா?

யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தில் வைத்து புளட் போராளி சுந்தரம் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவே மக்கள் மத்தியில் பகிரங்கமாக நிகழ்ந்த முதலாவது சகோதரப் படுகொலை. அப்போது இதனைக் கண்டித்து செல்லப்பா நாகராசா (வாத்தி) பிரசுரம் வெளியிட்டார். இந்த பிரசுரம் வெளியிடவும் அதனை இலங்கையில் விநியோகிக்கவும் முக்கிய பங்காற்றியவர்கள்(EPRLF) நாபாவும் (NLFT)விசுவானந்ததேவனும். ஆனால் தானும் இதே புலிகளால் பின்னாளில் கொல்லப்படுவேன் என நாபா அந் நேரம் நிச்சயமாக நினைத்திருக்கமாட்டார். ஏனெனில் பின்னாளில் அதே புலிகளுடன் இந்திய உளவுப்படைகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஜக்கிய முன்னனி கட்டியவர் இதே நாபா தான்.

1983க்கு முன்னர் இந்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள புரட்சிகர சக்திகளுடன் (நக்சலைட்டுகளுடன்) கூட்டு வைத்து செயற்பட்ட நாபா பின்னர் இந்திய அரசுடன் உறவு கொண்டு உதவிகள் பெற்றார். ஆனால் அதே இந்திய (இந்திரா) அரசு இவர்கள் கடத்திய அலன் தம்பதிகளை விடுதலை செய்யுமாறு இவர்களை ஓட்டலில் வைத்து அடித்து துவைத்தபோது வேறு வழியின்றி மௌனமாக விடுதலை செய்தார்கள்.

அதன் பின்னர் இந்திய அரசு இயக்கங்களை பலவந்தமாக தனது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்க வைத்தபோது நாபாவும் அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் இது பற்றி நான் அவரிடம் கேட்டபோது 'நாங்கள் இந்திய அரசை பயன்படுத்த நினைத்தோம். ஆனால் இந்திய அரசு எம்மை பயன்படுத்திவிட்டது' என்று வருத்தத்துடன் கூறினார்.

தமிழ் உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்தி புரட்சியை மேற்கொள்ளப் போவதாக கூறி சென்னையில் இருந்து இலங்கைக்கு திரும்பிய நாபா இந்திய அரசு மாகாணசபையை ஏற்குமாறு கோரியவுடன் புரட்சியை கைவிட்டுவிட்டு உடனே மாகாணசபையை ஏற்றுக்கொண்டார்.

எந்த தமிழ் மக்களுக்காக தனது வசதியான லண்டன் வாழ்க்கையை துறந்து போராட்டத்திற்கு வந்தாரோ அந்த தமிழ் மக்களை இந்திய ராணுவம் கொல்லும்போது நாபாவால் அதை தடுக்க முடியவில்லை. மாறாக வேறு வழியின்றி ஒத்துழைத்தார்.

அவரது கண் முன்னே பல தமிழ் மக்கள் கொல்லப்ட்டார்கள். பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்கள். பல கோடி ரூபா பெறுமதியான தமிழ் மக்களின் உடமைகள் செதமாக்கப்ட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக பல இளைஞர்கள் கட்டாய ராணுவ சேர்ப்புக்குள்ளாகி இதனால் புலிகளால் கொல்லப்பட்டார்கள். இதனை அவரால் அப்போது தடுக்க முடியாவிடினும் இது குறித்து அவர் இறக்கும்வரை ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்பது துரதிருஸடவசமானது.

போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள் எனக் கூறுவதுண்டு. ஏனெனில் அவர்களில் இருந்து ஆயிரமாயிரமாய் புதிய போராளிகள் முளைத்தெழுவார்கள். ஆனால் இன்று இத்தனை அழிவுகளுக்கும் பிறகும்கூட நாபா வின் பேரால் இந்திய அரசை ஆதரிப்பார்களேயானால் நாபாவில் இருந்து யாரும் முளைத்தெழ வேண்டாம் என்பதே தமிழ் மக்கள் விருப்பமாகும். எனவே நாபா நிரந்தரமாகவே புதைக்கப்பட்டதாக இருக்கட்டும். இதுவே தமிழ் மக்கள் நலனுக்குரியதாக இருக்கும்.

Photo: • பத்மநாபா விதைக்கப்பட்டாரா? அல்லது புதைக்கப்பட்டாரா?

No comments:

Post a Comment