• நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!
கடந்த காலங்களில் எல்லா தரப்பினராலும் பல தவறுகள் விடப்பட்டிருக்கின்றன. அவற்றை இன்று சுட்டிக்காட்டி பட்டியல் இட்டு தொடர்ந்தும் குரோதங்களை வளர்ப்பதால் யாருக்கு இலாபம்?
வேற்றுமைகளை பெரிதுபடுத்தி எதிரிக்கு உதவுவதை விடுத்து ஒற்றுமைகளை வளர்த்து எதிரியை விரட்டுவதே புத்திசாலித்தனமாகும்.
அண்மைய முஸ்லிம் மக்கள் மீதான இனவாத தாக்குதல்கள் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுடான ஒற்றுமைக்கும் வழிகோலியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கா 'பொதுபல சேனாவை' தடைசெய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
மங்கள சமரவீர 'இது அரசின் உளவு நிறுவனங்களாலும் கோத்தபாயாவின் பின்னனியிலும் நடைபெற்ற தாக்குதல்கள்' என கூறியதோடு அதற்குரிய ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் எனக் கூறியுள்ளார்.
'சம உரிமை இயக்கம்' யானது தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்களையும் ஒன்று திரட்டி கொழும்பு மாநகரில் 'இன்னொரு 1983 கலவரம் இடம்பெற அனுமதிக்மாட்டோம்'என்று அறிவித்துள்ளார்கள்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு சம்பந்தன் 'முஸ்லிம் மக்களுக்காக போராட தயார்' என அறிவித்துள்ளார்.
இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் முதல் முறையாக முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கப்பட்டுளன. வரவேற்கப்பட வேண்டிய திருப்பு முனை இது.
• கலைஞர் கருணாநிதி முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளார்.
• விடுதலை சிறுத்தை திருமாவளவன் இலங்கை தூரகத்தை முற்றுகை செய்துள்ளார்.
• வைகோ அவர்களும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
• 'நாம் தமிழர்' சீமான் போராட்டம் அறிவித்துள்ளார்
இவற்றை விட புலம் பெயர்ந்த நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக லண்டனில் மூவின மக்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
மிகப் பெரிய மாற்றம் ஆரம்பித்துள்ளது. தமிழ் முஸ்லிம் மக்களிடையே மட்டுமல்ல சிங்கள மக்களுடனும் ஜக்கியத்திற்கான வழி திறந்துள்ளது.
இனவாத அரசின் சூழ்சிகளுக்கு இரையாகாமல் மக்கள் தொடர்ந்தும் ஜக்கியமாக செயற்பட்டு இந்த இனவெறி மக்கள் விரோத அரசை தூக்கியெறிய வேண்டும்.

No comments:
Post a Comment