Saturday, July 19, 2014

அமிர்தலிங்கம், உமா மகேஸ்வரன் இருவரையும் ஒன்றாக நினைவு கூர முடியுமா?

• அமிர்தலிங்கம், உமா மகேஸ்வரன் இருவரையும் ஒன்றாக நினைவு கூர முடியுமா?

புளட் இயக்கமானது தனது 25வது 'வீர மக்கள் தின'த்தில் தமிழர்விடுதலைக்கூட்டனி தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் புளட் இயக்க தலைவர் உமாமகேஸ்வரன் இருவருக்கும் ஒன்றாக அஞ்சலி செலுத்தியுள்ளது.

• முதன் முதலில் தமிழீழ தனிநாட்டுக்கோரிக்கையை சுயாட்சிக்கழக நவரட்ணம் முன்வைத்தபோது அதனை தற்கொலைக்கு ஒப்பானது என்று கூறியவர் அமிர்தலிங்கம். ஆனால் அடுத்த ஆறு மாதத்தில் தான் தேர்தலில் தோற்றதும் தனது பதவி ஆசைக்காக தமிழீழ தனிநாட்டு தீர்வை அவரே முன்வைத்தார். ஆனால் உமாமகேஸ்வரன் தனது நில அளவையாளர் பதவியை உதறிவிட்டு தமிழீழ போராட்டத்திற்கு முன்வந்தவர்.

• அமிர்தலிங்கம் தமிழீழத்தை பாராளுமன்ற பாதை மூலமும் அகிம்சை போராட்டம் மூலமும் அடையலாம் என இளைஞர்களை ஏமாற்றினார். ஆனால் உமாமகேஸ்வரன் ஆயுதப் போராட்டம் மூலம் தமிழீழம் அடைவதற்காக லெபனான் வரை சென்று பயிற்சி எடுத்தவர்.

• இயக்கங்களுக்கு பயிற்சி அளிக்க இந்திராகாந்தி முடிவு செய்தபோது டில்லிவரை சென்று அதனை தடுக்க முனைந்தவர் அமிர்தலிங்கம். ஆனால் அதனை தடுக்க முடியாமற்போனதும் மதுரையில் படித்துக்கொண்டிருந்த தனது மகன் ஆரம்பித்த ஆயுத இயக்கத்திற்கு அவரும் மனைவியும் உதவி செய்தனர்.

• தரப்படுத்தலுக்கு எதிராக இளைஞர்களை போராட தூண்டிவிட்டு தனது மகனுக்கு மட்டும் மதுரை மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு எம்.ஜி.ஆர் மூலம் சீட்டு வாங்கியவர் அமிர்தலிங்கம். அதுமட்டுமல்ல 1983க்கு பின்பு தமிழ் மக்கள் இந்தியாவில் அகதி முகாமில் வாடிய போது அமிர்தலிங்கம் தம்பதி எம்.எல்.ஏ விடுதியில் குளிரூட்டப்பட்ட அறையில் சொகுசாக தங்கியிருந்தார்கள். ஆனால் உமா மகேஸ்வரன் போராளிகளுடன் எளிமையாக வாழ்ந்தார்.

• அமிரும் அவர் மனைவி மங்கை அக்காவும் தமது பதவி ஆசைகளுக்காக சிங்களவனின் தோலை உரித்து செருப்பு தைத்து போட வேண்டும் என இனவாத பேச்சுக்களை பேசினார்கள். ஆனால் உமாவின் புளட் இயக்கம் சிங்களவர்களை சகோதரர்களாக நினைத்து அவர்களுக்காக சிங்களத்தில் வானொலி நடத்தியது. பல சிங்கள இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் இராணுவ உதவிகளை செய்தது.

• இந்திய இராணுவத்தின் அக்கிரமங்களை கண்டிக்க மறுத்ததுடன் இந்திய தூதுவரையும் சந்திக்க இருந்து நேரத்திலே அவரின் துரோகத்திற்காக புலிகள் இயக்கத்தால் அமிர்தலிங்கம் சுடப்பட்டார். ஆனால் உமாமகேஸ்வரன் இந்திய உளவுப்படைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து இலங்கை வந்து கொழும்பில் தங்கியிருந்தவேளை அவரது இயக்க உறுப்பினராலேயே சுடப்பட்டார். சுட்ட அந்த உறுப்பினரை இந்திய உளவுப்படையே இறுதிவரை பாதுகாத்து வந்தது.

• அமிர்தலிங்கம் தனது போட்டியாளர்களை துரோகிகள் என முத்திரை குத்தி இளுஞர்கள் மூலம் கொன்றொழித்தார். அதேபோல் உமா மகேஸ்வரன் தலைமைக்கு எதிரானவர்களும் அவரது இயக்க புலனாய்வு மூலம் கொல்லப்பட்டார்கள். இருப்பினும் இருவரையும் ஒருபோதும் ஒன்றாக ஒப்பிட முடியாது.

Photo: • அமிர்தலிங்கம், உமா மகேஸ்வரன் இருவரையும் ஒன்றாக நினைவு கூர முடியுமா?

No comments:

Post a Comment