Saturday, July 19, 2014

இஸ்ரேலிய டாங்கிக்கு எதிராக பாலஸ்தீன சிறுவன் எறியும் கல் அணுகுண்டைவிட வலிமையானது!

 இஸ்ரேலிய டாங்கிக்கு எதிராக பாலஸ்தீன சிறுவன்
எறியும் கல் அணுகுண்டைவிட வலிமையானது!

“மக்கள் சக்தி மகத்தானது. அது அணுகுண்டை விட வலிமையானது” என்று மாக்சிய ஆசான் தோழர் மாசேதுங் கூறினார்.

இன்று இஸ்ரேலிய அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழும் பாலஸ்தீன சிறுவர் போராட்டம் நாளை மாபெரும் மக்கள் போராட்டமாக வெடிக்கும். அது இஸ்ரேலிய அரசை நிச்சயம் தோற்கடிக்கும்.

பயங்கரவாதிகளை ஒழிப்பதாக கூறி இலங்கை அரசு எத்தனையோ சிறுவர்களை கொன்றது. அதேபோல் இன்று இஸ்ரேலிய அரசு பயங்கரவாதிகளை அழிப்பதாக கூறி பாலஸ்தீன சிறுவர்களை கொல்கிறது.

இலங்கையில் அப்பாவி தமிழ் மக்களை அழிக்க எந்த ஏகாதிபத்தியங்கள் ஆதரவும் உதவியும் வழங்கினவையோ அவை இன்று இஸ்ரேலுக்கு உதவுகின்றன.
ஆனால் அந்த ஏகாதிபத்தியங்கள் ஜ.நா மூலம் தீர்வு பெற்று தரும் என நம்மவர் சிலர் மக்களை நம்ப வைக்க முயலுகின்றனர்.

காஸ்மீரில் இந்திய ராணுவம் அப்பாவிகளை கொன்றபோது தமிழர்கள் காஸ்மீர் மக்களை ஆதரிக்கவில்லை. பின்னர் இந்திய ராணுவம் தமிழ் மக்களை அழித்தபோது காஸ்மீர் மக்கள் மௌனமாக இருந்தனர்.

இலங்கையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டபோது பாலஸ்தீனம் அதனை கண்டிக்கவில்லை. மாறாக மகிந்த ராஜபக்சவை அழைத்து வரவேற்பு கொடுத்தது. இப்போது இஸ்ரவேல் பாலஸ்தீனத்தை அழிக்கும்பொது தமிழ் மக்கள் கண்டிக்கவில்லை. மௌனம் காக்கின்றனர்.

ஏகாதிபத்தியங்கள் ஒன்று சேர்ந்து மக்களை அழிக்கின்றனர். ஆனால் மக்களோ ஒடுக்கு முறைக்கு எதிராக ஒன்று சேராமல் பிரிந்து நிற்கின்றனர்.

பாலஸ்தீன சிறுவன் எறியும் கல் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தருகிறது.
அடக்கு முறைக்கு எதிராக அனைத்து மக்களையும் ஒன்றிணைப்போம்.
இறுதி வெற்றி உறுதி எமக்கு!

Photo: • இஸ்ரேலிய டாங்கிக்கு எதிராக பாலஸ்தீன சிறுவன் 

No comments:

Post a Comment