Saturday, July 19, 2014

தமிழ் பெண்கள் மீதான தொடரும் ராணுவ பாலியல் வல்லுறவுகள்!

யுத்தத்தின்போது கூட பாலியல் வல்லுறவு ஒரு ஆயுதமாக பெண்கள் மீது பாவிக்கக்கூடாது என சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. ஆனால் போர் முடிந்து நான்கு வருடமாகியும் தமிழ் பெண்கள் மீதான இலங்கை ராணுவத்தின் பாலியல் வல்லுறவுகள் தொடருகின்றன. இது குறித்து இலங்கை அரசு மட்டுமல்ல சர்வதேச நிறுவனங்கள்கூட எந்தவித அக்கறையும் இன்றி இருப்பது அதிர்ச்சி தருகிறது.

காரைநகரில் 9வயது மற்றும் 11வயது தமிழ் சிறுமிகள் இருவர் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து ஒரு வாரம் பாலியல் வல்லுறலுக்குள்ளாக்கப்பட்டமை மனித நேயம் மிக்க அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.

கடந்தவருடம் நெடுங்கேனியில் ஒரு பாடசாலை மாணவி ராணுவ வீரர் ஒருவரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அது குறித்து இதுவரை எந்தவித விசாரணயும் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த பாடசாலை சிறுமிகளுக்கு நடந்துள்ள கொடுமை இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சியா அல்லது ராணுவ ஆட்சியா என கேட்கத் தூண்டுகிறது.

கடந்த நான்கு வருடங்களில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக இரண்டு லட்சத்து பத்தாயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு சபைத் தலைவி அனோமா திசநாயக்கா தெரிவித்துள்ளார். இதில் 25ஆயிரம் முறைப்பாடுகள் மட்டுமே விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலக அளவில் சிறுவர் பாலியல் குற்றங்களில் இலங்கையே முதலிடம் பெற்றுள்ளது. இதுவே மகிந்த அரசின் சாதனையாக உள்ளது. போர் நடைபெற்ற காலங்களில்கூட இந்தளவு மோசமாக நிலமை இருந்ததில்லை.

தமிழ்மக்களுக்கு பல,
பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்
நாடுகடந்த தமிழீழ பிரதமர் இருக்கிறார்.
ஆனால் தமிழ் பெண்கள் மீதான இந்த பாலியல் வல்லுறவுகள் குறித்து குரல் கொடுக்க யாருமே இல்லையே!

Photo: • தமிழ் பெண்கள் மீதான தொடரும் ராணுவ பாலியல் வல்லுறவுகள்!

No comments:

Post a Comment