Saturday, July 19, 2014

அன்பான சிங்கள சகோதரர்களுக்கு! உங்கள் சிந்தனைக்கு சில வரிகள்!

அன்பான சிங்கள சகோதரர்களுக்கு!
உங்கள் சிந்தனைக்கு சில வரிகள்!

• 1983ல் தமிழ் மக்கள் மத்தியில் 36 இயக்கங்கள் தோன்றின். அவை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தன. ஆனால் அவற்றில் ஒன்றுகூட தமிழ் பகுதிகளை பிரித்து இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரியதில்லை.

• காஸ்மீரில் சில இயக்கங்கள் காஸ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் எனக் கோருகின்றன. ஆனால் இலங்கை தமிழ்மக்கள் இத்தனை அழிவுக்கு பின்பும்கூட தமது பகுதிகளை பிரித்து தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும் என கோரவில்லை.

• தமிழ்நாட்டில்கூட தமிழீழ பகுதிகளை உள்ளடக்கிய அகண்ட தமிழ்நாடு கோருவோர் உண்டு. ஆனால் இலங்கையில் அப்படி கோரிக்கை கொண்ட ஒருவர்கூட இல்லை.

• புலிகளை பயங்கரவாதிகள் என இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் அவர்கள் தாங்கள் அழியும் நிலையில்கூட தமது குண்டுகளை சிங்கள அப்பாவி மக்கள் மீது வீசவில்லை. லக்சபானா நீர்த்தேக்கத்திற்கு குண்டு வீசி பாரிய அழிவை ஏற்படுத்தும்படி சிலர் கோரினார்கள். ஆனாலும் புலிகள் அதைச் செய்யவில்லை. ஆனால் தன்னை ஒரு ஜனநாயக அரசு எனக் கூறும் இலங்கை அரசு அப்பாவி தமிழ்மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று அழித்தது. சரணடைந்தவர்களைக்கூட சுட்டுக்கொன்றது.

• இலங்கை அரசால் பயங்கரவாதிகள் எனக் குறிப்பிட்டு அன்று ஜே.வி.பி தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் தலைவர் விஜயவீராவின் மனைவி பிள்ளைகள் அரச பாதுகாப்புடன் வளர்க்கப்படுகின்றனர். அதேவேளை புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டுமல்ல அவரின் குடும்பத்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டது ஏன்? இவர்கள் தமிழர்கள் என்பதால்தானே?

• ஜே.வி.பி உறுப்பினர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு அவர்கள் ஜனநாய நீரோட்டத்தில் இணைவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் புலி உறுப்பினர்கள் என்ற பேரில் இன்னமும் பலர் விடுதலை செய்யப்படாமல் இருப்பது ஏன்? அதுமட்டுமல்ல விஜயவீரா நினைவு தினம் அனுட்டிக்க எந்த தடையும் இல்லை. ஆனால் தமிழ் மக்கள் போரில் இறந்த தமது உறவினர்களைக்கூட நினைவு செய்ய அனுமதி மறுக்கப்புடுவது எதற்காக? தமிழர்கள் என்ற காரணம் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

• போரில் தான் வென்றுவிட்டதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் வென்றது இந்திய அரசே. ஏனெனில் 1983க்கு முன்னர் இலங்கையில் இந்திய கம்பனிகள் வெறும் 30வீதமே. ஆனால் இன்று 91வீதம். அதுமட்டுமா இந்திய இறக்குமதி 65வீதமாக உள்ளது. மொத்தத்தில் இந்திய சுரண்டலுக்கே போர் வழி சமைத்துள்ளது.

• சிங்கள மக்களின் வறுமைக்கு புலிகளுடனான போரே காரணம் எனக்கூறப்பட்டது. ஆனால் இன்று புலிகள் அழிக்கப்பட்டு 5 வருடமாகிறது. ஆனால் சிங்கள மக்களின் வறுமை ஒழியவில்லையே? மாறாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 150 பேர் உயர் பதவிகளில் அமர்ந்து கொண்டு மொத்த நாட்டையுமே அல்லவா கொள்ளையடிக்கின்றனர். இதற்காகவா போரில் சிங்கள இளைஞர்கள் தங்கள் உயிர்களை துறந்தார்கள்?

• இன்று இலங்கையில் உள்ள ராணுவத்தின் எண்ணிக்கை 3 லட்சம். அதாவது சராசரி 60பேருக்கு ஒரு ராணுவம். மொத்த வருமானத்தில் 32 வீதம் பாதுகாப்பு செலவு. இந்த பெரும் செலவு யாரைப் பாதுகாக்க? ராஜபக்ச மகன் நடிகை அசினுடன் ஓட்டலில் அரட்டை அடிப்பதற்கும் , கார் ஓட்டப் பந்தயம் நடத்துவதற்கும் பாதுகாப்பு கொடுக்க இத்தனை செலவு கொண்ட ராணுவம் அவசியமா?

• வடபகுதியில் தமிழ் மக்களை அடக்கிய ராணுவம் இப்போது தென் இலங்கையில் முஸ்லிம்கள் மீதும் சிங்கள மக்கள் மீதும் ஏவி விடப்படுகிறது. குடி தண்ணீர் கேட்ட நீர்கொழும்பு மக்கள் மீது ராணுவம் ஏவி விடப்படுகிறது. இத்தனைக்கும் குடிதண்ணீரில் இரசாயணக் கழிவைக் கலக்கும் இந்தியக் கம்பனிக்காக சொந்த நாட்டு மக்கள் மீது ராணுவம் ஏவி விடப்படுகிறது.

• புலிகளைக் காட்டி பதவிக்கு வந்தவர்கள் இனி புலிகளைக் காட்டி முடியாது என்ற நிலையில் அடுத்த தேர்தலில் மீண்டும் பதவியைப் பிடிப்பதற்காக முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக காட்டி கலவரங்களை உருவாக்குகின்றனர்.

• ஒரு இனத்தை அடக்கும் எந்த இனமும் சுதந்திரமாக இருக்கமுடியாது என மாக்சிய ஆசான்கள் கூறுகின்றனர். எனவே சிங்கள் மக்கள் உண்மையிலே சுதந்திரத்தை அனுபவிக்க விரும்பினால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சம உரிமையை வழங்க வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை.

தற்போது உலக கால்பந்து போட்டி நடக்கிறது. எனவே அந்த மொழியில் உங்களிடம் பேசுகிறேன். பந்து இப்பொழுது உங்கள் பக்கத்தில் உள்ளது. எப்படி விளையாடப் போகிறீர்கள்?

Photo: அன்பான சிங்கள சகோதரர்களுக்கு!

No comments:

Post a Comment