Monday, January 20, 2014

• தோழர் சண்முகதாசன் சாதித்தது என்ன?

• தோழர் சண்முகதாசன் சாதித்தது என்ன?

இலங்கையில் புரட்சிவாதிகள் எதனையும் சாதிக்கவில்லை என சிலர் வரலாற்றை திரித்து எழுத முற்படுகின்றனர். அவர்களின் கவனத்திற்காக தோழர் சண்முகதாசன் தலைமையில் புரட்சிவாதிகள் சாதித்த சிலவற்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

(1) ரஸ்சியாவில் குருசேவ் முன்வைத்த திருத்தல்வாத்தை அம்பலப்படுத்தி இலங்கையில் மாவோசிச சிந்தனையில் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்வைத்தமை.

(2) பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப்பாதையை அறிமுகப்படுத்தியமை.

(3) இந்தியாவில் நக்சல்பாரிகளின் தனிநபர் அழித்தொழிப்பின் தத்துவார்த்த தவறுகளை சுட்டிக்காட்டியதோடு இலங்கையிலும் அவ்வாறான தவறுகள் நிகழாமல் தடுத்தமை

(4) இலங்கை தமிழ் மக்களுக்கு இந்திய அரசு நண்பன் அல்ல. அதுவும் ஒரு எதிரியே என்று அன்றே இனம் காட்டியமை.

(5) “தமிழீழம்” தமிழ் மக்களுக்கு சிறந்த தீர்வு அல்ல. மாறாக அழிவையே பெற்றுக்கொடுக்கும் என்பதை அன்றே எதிர்வு கூறியமை.

(6) இலங்கையில் இனப்பிரச்சனைக்கு தீர்வாக பிரதேச சுயாட்சியை முன்வைத்தமை

(7) “அடிக்கு அடி” என தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதித்து சாதீயத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கியமை

• தந்தை செல்வா தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றார். அமிர்தலிங்கம் அகிம்சை முறையில் தமிழீழம் காண்போம் என்றார். ஆனால் தமிழ் இளைஞர்கள் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திப் போராடியதற்கு தோழர் சண்முகதாசன் தலைமையிலான புரட்சிவாதிகளின் ஆயுதப் போராட்ட பிரச்சாரமே காரணமாக அமைந்தது.

• ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் இளைஞர்களை அமிர்தலிங்கம் “பொடியன்கள்” என்று அழைத்தார். இலங்கை அரசு “பயங்கரவாதிகள்” என்றது. ஆனால் தோழர் சண்முகதாசனே கொழும்பில் அதுவும் சிறிமாவோபண்டாரநாயக்கா தலைமை வகித்த கூட்டத்தில் தமிழ் இளைஞர்களை முதன் முதலாக “போராளிகள்” என்று அழைத்தார்.

• இந்திய அரசு போராளிகளுக்கு பயிற்சி கொடுப்பதை அறிந்த அமிர்தலிங்கம் டில்லிவரை சென்று போராளிகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டாம் என இந்திராகாந்தியிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் தோழர் சண்முகதாசன் “இரவல் படையில் புரட்சி எதற்கு?” எனக் கேட்டு சொந்த மண்ணில் சொந்தப் பலத்தில் போராடும்படி வலியுறுத்தினார்.

• “சண்முகதாசன் ஆயுதம் எந்திப் போராடியிருந்தால் நான் ஆயுதம் ஏந்தியிருக் வேண்டியிரக்காது” என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு முறை கூறினார். அந்தளவுக்கு அனைத்து இயக்க போராளிகளின் தலைமையிடமும் தோழர் சண்முகதாசன் மதிப்பு பெற்றிருந்தார்.

• தோழர் சண்முகதாசன் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்களவர்கள் முஸ்லிம்கள் என அனைத்து பிரிவினரிடமும் மதிப்பு பெற்றிருந்த ஒரு தலைவர். அவர் இலங்கை தலைவர் மட்டுமல்ல. அவர் உலகில் உள்ள புரட்சிவாதிகளால் மதிக்கப்பட்ட சர்வதேச தலைவர்.

No comments:

Post a Comment