Monday, January 20, 2014

• அடைத்து வைத்திருக்கும் அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்!

இலங்கை அரசே!

• அடைத்து வைத்திருக்கும் அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்!

• காணாமல் போன உறவுகள் குறித்து உடனே பொறுப்பான பதில் கூறு!

இந்திய அரசே!

• சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை உடனே விடுதலை செய்!

யுத்தம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இந்த அவல நிலை குறித்து ஜனாதிபதி முதல் அயல்நாட்டு பிரதமர்கள் உட்பட ஜ.நா வரை முறையிட்டும் எந்த பயனும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் விடுதலை ஆண்டாக அமைய நாம் அனைவரும் உழைக்க வேண்டும் என புத்தாண்டு சபதம் எடுத்தோம். அதில் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை தரும் விதத்pல் பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் விடுதலை செய்யக் கோரும் தீர்மானத்தை மாகாணசபையில் முன்மொழிந்துள்ளார். அதனை வழிமொழிந்து பேசிய மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் சிறை சென்று அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடப் போவதாக கூறியுள்ளார்.

இவர்கள் கேட்டவுடன் அரசு உடனே விடுதலை செய்யும் என நாம் நம்பவில்லைதான். இருந்தாலும் பொறுப்பில் உள்ள இவர்கள் குரல் கொடுக்கும்போது அது உலகத்தின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும். இப்படி பலரும் தொடர்ந்து குரல் கொடுத்து போராடினால் நிச்சயம் சிறையில் உள்ளவர்களுக்கு விடுதலை கிடைக்கும். பல்லாண்டுகளாக அடைபட்டுக் கிடக்கும் அவர்களின் விடுதலைக்கு நாம் உழைக்க வேண்டியது எமது கடமையாகும்.

இலங்கை சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக மட்டுமன்றி தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்காகவும் இந்த மாகாணசபை குரல் கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்தியாவில் இது தேர்தல் காலம். எனவே தமிழ் இன உணர்வாளர்கள் இந்த சிறப்பு அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுத்து அவர்களின் விடுதலைக்கு வழி சமைக்க முன்வரவேண்டும் எனக் கேட்டக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment