Monday, January 20, 2014

• மீனவர்கள் தாக்கப்பட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் - கலைஞர் அறிக்கை.

• மீனவர்கள் தாக்கப்பட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் - கலைஞர் அறிக்கை.

இதுவரை சுமார் 600 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அயிரக் கணக்கானவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். பலர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் வராத உணர்வு இப்போது எதற்காக கலைஞருக்கு வருகிறது?

தேர்தல் நெருங்குகிறது. எனவே அறிக்கையுடன் நிறுத்தாமல் சில வேளை கூறியபடி கலைஞர் உண்ணாவிரதம் இருக்கவும் முனையலாம். ஆனால் இதன் மூலம் மீனவர்கள் பிரச்சனை தீருமா?

• மீனவர் பிரச்சனை தீராமைக்கு மத்திய அரசே காரணம் - ஜெயா அம்மையார் கூறுகிறார்.

மீனவர் பிரச்சனை தீராமைக்கு மத்திய அரசே காரணம் என்றும் அதனால் கச்சதீவை மீட்க வேண்டும் என்று சட்டசபையில் அவர் தீர்மானம் இயற்றுகிறார். கச்சதீவை மீட்டால் எப்படி இந்த மீனவர் பிரச்சனை தீரும் எனக் கேட்டால் அதற்கு பதில் தர மறுக்கிறார்.

• இலங்கை தமிழ் மீனவனே உண்மையில் பரிதாபத்திற்குரியவன்.

ஒரு பக்கம் தமிழக மீனவர்கள் எல்லை மீறி வந்து மீன் பிடிப்பது மட்டுமல்ல வலைகளை அறுத்தும் செல்கிறார்கள். இன்னொரு பக்கம் இலங்கை அரசு சிங்கள மீனவர்களை கொண்டு வந்து ஆக்கிரமிக்கிறது. இவற்றுகிடையில் அகபட்டு வாழ முடியாமல் உண்மையில் பரிதாபத்திற்கு உரியவர்களாக இரப்பவர்கள் இலங்கை தமிழ் மீனவர்களே!.

மிகவும் கஸ்ட நிலையில் இருக்கும் இலங்கை தமிழ் மீனவர்கள் குறித்து யாராவது கவலைப்படுகிறார்களா?
இலங்கை இந்திய அரசுகள் ஏதும் அக்கறை கொள்கின்றனவா?
ஏன் கலைஞர் ஜெயா அம்மையார் கூட இந்த தமிழ் மீனவர்கள் குறித்து கவலை கொள்ளவில்லை?

• பேச்சுவார்த்தைக்கு இலங்கை தமிழ் மீனவர்கள் அழைப்பு!

இந்த மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையில் பேச்சுவார்ததை நிகழ வேண்டும். இதற்கு எற்பாடு செய்து தரும்படி இலங்கை தமிழ் மீனவர்கள் பல முறை தமிழக அரசிடம் கேட்டுவிட்டனர். ஆனால் ஜெயா அம்மையார் இது குறித்து எந்த பதிலும் அளிக்காமல் அக்கறை இன்றி இருக்கிறார்.

எனவே கலைஞர் மற்றும் ஜெயா அம்மையார் அவர்களே!

உங்களுக்கு இந்த மீனவர்கள் பிரச்சனை தீர வேண்டும் என்று உண்மையிலே அக்கறை இருக்குமாயின் இலங்கை தமிழ் மீனவர்கள் கேட்டுக்கொள்ளும் இலங்கை இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு எற்பாடு செய்து கொடுங்கள்.

அதைவிடுத்து தேர்தல் திருவிழாவுக்கு நாடகம் போட நீங்கள் முயற்சி செய்தால் வரலாறு உங்களை மன்னிக்காது என எச்சரிக்கின்றோம்.

No comments:

Post a Comment