Tuesday, June 30, 2015

வரதராஜ பெருமாள் அவர்களே!

• வரதராஜ பெருமாள் அவர்களே!
மனட்சாட்சி இருந்தால் பதில் தாருங்கள்
"இந்தியாவோடு தோழர் நாபா ஏற்படுத்திக்கொண்ட உறவை சிலர் பிற்போக்கு முதலாளித்துவத்தோடு ஏற்படுத்திக்கொண்ட உறவாக விமர்சித்தனர். ஆனால் அவரோ வியட்நாமின் கோசிமின், கியூபாவின் பிடல் காஸ்ரோ, தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டலோ, பாலஸ்தீனத்தின் அரபாத் போன்றோரின் கண்ணோட்டத்திலேயே இந்தியாவினுடைய உறவைப் பார்த்தார்." - வரதராஜ பெருமாள்
பெருமாள் அவர்களே!
இந்திய ராணுவம் வியட்நாமில் கொத்து குண்டுகளை வீசியிருந்தால் கோசிமின் இந்தியாவை ஆதரித்திருப்பாரா?
இந்திய ராணுவம் பாலஸ்தீனத்தில் பெண்களை பாலியல் வல்லுறவு செய்திருந்தால் அரபாத் இந்தியாவுடன் உறவு வைத்திருப்பாரா?
இந்திய ராணுவம் தென்னாபிரிக்க நிறவெறி அரசுக்கு உதவியிருந்தால் நெல்சன் மண்டலோ இந்தியாவை ஏற்றிருப்பாரா?
• தமிழ் மக்களை இந்திய ராணவம் கொல்லும் போது
• தமிழ்பெண்களை இந்திய ராணுவம் பாலியல் வல்லறவு செய்த போது
• தமிழ் மக்களின் உடமைகளை இந்திய ராணுவம் சேதமாக்கியபோது
அதற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய நாபாவின் துரோகத்தை கோசிமினுடனும் ,அரபாத்துடனும் நெல்சன் மண்டலேவுடன் எப்படி ஒப்பிட முடியும்?
அதெல்லாம் சரி , நாட்டை விட்டு வெளியேறும்போது தமிழீழ பிரகடனம் செய்தீர்களே! அதை உங்கள் இந்தியா ஏற்கிறதா ? இல்லையா? அதையாவது மனட்சாட்சியோடு சொல்லுவீர்களா?
ஈழத்தைக் கைவிட்டுவிட்டீர்கள்
புரட்சியைக் கைவிட்டுவிட்டிர்கள்
இன்னும் எதற்கு "ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி" என்ற பெயர்?
அதையும் விட்டுவிட வேண்டியதுதானே?

No comments:

Post a Comment