Tuesday, June 30, 2015

நாபா" தியாகியா? துரோகியா?

"நாபா" தியாகியா? துரோகியா?
அவர் விதைக்கப்பட்டாரா? புதைக்கப்பட்டாரா?
இந்திய ராணுவத்தால் பல ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது,
இந்திய ராணுவத்தால் தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டபோது
இந்திய ராணுவத்தால் பல கோடி ரூபா சொத்துக்கள் சேதமாக்கப்பட்டபோது
அதற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய "நாபா" எப்படி தியாகியாக முடியும்?
இந்திய ராணுவத்தின் காலத்தில் பலவந்தமாக இளைஞர்கள் பிடித்து சென்று கட்டாய பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டபோதும்,அதனால் பல இளைஞர்கள் பின்னர் புலிகளால் கொல்லப்பட நேர்ந்தமை குறித்தும், ஒருபோதும் எந்த வருத்தமும் தெரிவிக்காதவர் எப்படி தமிழ் மக்களுக்கு தியாகியாக முடியும்?
தமிழின விடுதலையை அழித்து வரும் இந்திய அரசுக்கு இறுதிவரை ஆதரவு வழங்கியவர் நாபா!
இந்திய துரோகத்திற்கு இறுதிவரை தனது முழு ஒத்துழைப்பு வழங்கியவர் நாபா!
தனது இத் துரோகத்திற்கு ஒருபோதும் மனம் வருந்தாதவர். ஒருபோதும் மன்னிப்பு கோராதவர் நாபா.
அவர் எப்படி தமிழ் மக்களுக்கு தியாகியாக முடியும்?
அவர் பெயரால் எப்படி தியாகிகள் தினம் கொண்டாட முடியும்?
துரோகிகள் ஒருபோதும் விதைக்கபபடுவதில்லை. அவர்களில் இருந்து ஆயிரமாயிரம் போராளிகள் முளைப்பதும் இல்லை.
ஈழத்தைக் கைவிட்டவர்கள்,
புரட்சியையும் கைவிட்டவர்கள்,
பதவிக்காக தேர்தல் பாதையில் புகுந்தவர்கள்,
இன்னும் ஏன் "ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனி" என்னும் பெயரில் ஒட்டிக்கொண்டு திரிகிறார்கள்?
இந்திய அரசு வழங்கும் பணத்திற்காக இன்னும் எத்தனை காலம் கட்சி நடத்தி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யப்போகிறார்கள்?

No comments:

Post a Comment