Tuesday, June 30, 2015

கனிமொழியின் துரோகம்

• கனிமொழியின் துரோகம் 
மறக்க முடியுமா? இல்லை
மன்னிக்கத்தான் முடியுமா?
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின படுகொலையில் கனிமொழியின் துரோகமும் இந்திய அரசின் பங்கும் ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்டு வருகிறது.
கலைஞரின் கனிமொழி தனது துரோகத்தை மட்டுமல்ல இந்திய அரசின் துரோகத்தையும் மூடி மறைக்க முயல்கிறார்.
ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல தமிழக மக்களும் இவர்களது துரோகத்தை இனங்காண ஆரம்பித்துள்ளார்கள்.
இதனால் இந்திய அரசின் துரோகத்தை மறைக்க முயல்வோர் ஆனந்தியை தூற்ற ஆரம்பித்துள்ளனர்.
ஆனந்தி புலி இயக்கத்தில் இருந்தவரா?
இதை ஏன் அவர் முன்னரே சொல்லவில்லை?
இப்போது ஏன் சொல்ல முயற்சிக்கிறார்?
இவர் பேசாமல் மௌனமாக இருந்திருக்கலாம்தானே?
இவர் ஜெயா அம்மையாருக்காக இதை கூறுகிறாரா?
இவரை பி.ஜே.பி அரசு தவறாக வழிநடத்துகிறதா?
இவர் தி.மு.க வின் வெற்றியை தடுக்க முனைகிறாரா?
என்றெல்லாம் ஆனந்தி மீது வசை பாடுகிறார்கள்.
இவர்களிடம் நாம் ஒன்றை கேட்க விரும்புகிறோம். 
ஆனந்தி யாராகவும், என்னவாகவும் இருந்துவிட்டு போகட்டும். அதுவல்ல இங்கு முக்கியம். அவரது குற்றச்சாட்டிற்கு உங்கள் பதில் என்ன?
அவரது வாக்கு மூலம் கனிமொழியையும் இந்திய அரசையும்தானே அம்பலப்படுத்துகிறது. இதில் நீங்கள் ஏன் எரிச்சல் அடைகிறீர்கள்?
ஆனந்தியை தூற்றி அதன் மூலம் இந்திய அரசசின் துரோகத்தை காப்பாற்ற முயலும் உங்கள் நோக்கத்தை என்வென்று அழைப்பது?
இந்திய உளவு அமைப்புகள் விட்டெறியும் எலும்பு துண்டுகளுக்காக நீங்கள் வாலாட்டுவது ஆனந்திக்கு எதிராக அல்ல மாறாக தமிழ் மக்களுக்கு எதிராக என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment