Tuesday, June 30, 2015

குணா கவியழகனின் "விடமேறிய கனவு"

 குணா கவியழகனின் "விடமேறிய கனவு"
குணா கவியழகன் எழுதி அகல் பதிப்பக வெளியீடாக அண்மையில் வெளிவந்திருக்கும் நாவல் "விடமேறிய கனவு"
தமிழ் மக்களின் போராட்ட இலக்கியத்தில் வெளிவந்திருக்கும் இன்னொரு நாவல் இது. அந்த வகையில் இதுவும் வரவேற்கப்பட வேண்டியதே.
இந் நாவல் அண்மையில் கனடாவில் வெளியிடப்பட்டது. எதிர்வரும் 28ம் திகதி பிரான்சில் வெளியிடப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட போராளிகளுக்கு இலங்கை அரசால் இழைக்கப்பட்ட கொடுமைகளை விபரிக்கும் நாவல் இது.
புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை நன்கு வெளிப்படுத்துகிறது.
இறுதியாக முகாமில் இருந்து தப்பி செல்கிறார்கள் என்ற புனைவு முடிவை தவிர்த்திருந்தால் நாவல் இன்னும் யதாhத்தமாக இருந்திருக்கும்.
• புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார்களா?
• கட்டாய ஆட்சேர்ப்புதானா தோல்விக்கு காரணம்?
கட்டாய ஆட்சேர்ப்பே புலிகளின் தோல்விக்கு காரணம் என இந் நாவலில் பேசப்படுகிறது. தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இதுமட்டுமே காரணம் என்பது எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியும்?
இலங்கை அரசும் சர்வதேச நாடுகள் சிலவும் கட்டாய ஆட்சேர்ப்பிற்காக புலிகள் மீது போர்க்குற்றம் சுமத்தும் வேளையில் புலிகள் அமைப்பில் இருந்த ஒருவரே அதை எழுதுவது ஆச்சரியமாக இருக்கிறது!

No comments:

Post a Comment