Tuesday, June 30, 2015

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி லண்டனில் நடைபெற்ற போராட்டம்

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி லண்டனில் நடைபெற்ற போராட்டம்
இலங்கையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி நேற்றைய தினம் (20.06.2015); லண்டனில் பாராளுமன்ற திடலில் சமவுரிமை இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
யுத்தம் முடிந்து 6 வருடங்களாகிவிட்டது. இன்னும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
புதிய மைத்திரி அரசு பதவியேற்று 100 நாட்கள் முடிந்துவிட்டது. ஆனால் தமிழ் மக்கள் ஓட்டு மூலம் பதவியேற்ற அரசு கைதிகளை விடுதலை செய்யவில்லை.
கைதிகளை விடுதலை செய்யும்படி கோர வேண்டியவர்கள்,காணமல் போனவர்களை கண்டு பிடித்த தரவேண்டியவர்கள் ,தமிழர்களின் தலைவர்கள் தாங்களே எனக் கூறிக்கொண்டு இலங்கை அரசுடன் இரகசிய பேச்சுவார்த்தை செய்கின்றனர்.
லண்டனில் சோனியாவின் கண்களில் ஈரம் கண்ட சுரேன் அவர்களும் சம்பந்தர் தயவால் பின்கதவால் பாராளுமன்ற உறப்பினராகிய சுமந்திரனும் இலங்கை அரசுடன் ரகசிய பேச்சு நடத்தி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர்.
ஆனால் சிங்கள மக்களை கொண்ட சமவுரிமை இயக்கம் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரியதால் கோத்தபாயாவினால் காணமற் போனவர்கள் லலித் , குகன் போன்றவர்கள். அவர்களைக்கூட விடுதலை செய்ய இலங்கை அரசு மறுக்கிறது.
கரும்புலிகளை கொழும்புக்கு அனுப்பிய கருணா கைது செய்யப்படவில்லை. கரும்புலிகளுக்கு வெடி மருந்து வாங்கி அனுப்பிய கே.பி சுதந்திரமாக திரிகிறார். ஆனால் கரும்புலிக்கு தங்க இடம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேவதாசன் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
தன்மீதான குற்றச்சாட்டை ஒத்துக்கொள்ள தேவதாசன் முன்வந்த நிலையிலும்கூட அவரது வழக்கு விசாரணையை நடத்தாது வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறது இலங்கை அரசு.
தாமதப்படுத்தப்பட்டநீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும். இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது.
லண்டனில் கோட்டு சூட்டு போட்ட கனவான்கள் சுரேனும் சுமந்திரனும் தமிழ் மக்களுக்காக பேசுவதாக கூறி துரோகம் இழைக்கின்றனர்.
ஆனால் அதே லண்டனில் சமவுரிமை சார்பில் சிங்கள மக்கள் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு போராட்டம் நடத்துகின்றார்கள்.
 

No comments:

Post a Comment