Tuesday, May 28, 2013

இதுதான் மகிந்த சிந்தனையா? அல்லது வடக்கின் வசந்தமா?

இதுதான் மகிந்த சிந்தனையா?
அல்லது வடக்கின் வசந்தமா?

தாண்டிக்குளத்தில் ஒரு பெண் வறுமைகாரணமாக தன் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவருக்கு மெண்டல் என்று கூறி ஆஸ்பத்திரியில் வைத்துள்ளனர். ஏற்கனவே நியாயம் கேட்ட ஒரு மருத்துவர் மெண்டல் என முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

நெடுங்கேணியில் ஏழுவயது சிறமி பாலியல் வல்லுறவுகுள்ளாக்கப்பட்டிருக்கிறார். அது குறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபோல் தினமும் பல்வேறு செய்திகள் வருகின்றன. இது தமிழ் பகுதிகளில் மட்டுமன்றி சிங்களப் பகுதிகளிலும் இவ்வாறே நிகழ்கின்றன. இது தான் வடக்கின் வசந்தமா? அல்லது மகிந்த சிந்தனையா?

சர்மிளா சயித் என்ற முஸ்லிம் பெண்மனி விபச்சாரத்தை சட்ட ரீதியாக்குங்கள் என்றார். அவர் விபச்சாரத்தை விரும்புவர் அல்ல என்றாலும் அத் தொழிலை செய்யும் பெண்கள் மீது இரக்கம் கொண்டு இக் கோரிக்கையை வைத்தார். ஆனால் அடிப்படைவாதிகளின் கடும் எதிர்ப்பால் அவர் தலை மறைவாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது விபச்சாரம் செய்யும் பெண்களுக்கு அசிட் வீசப்படும் என ஒரு பௌத்த அமைப்பு நீர்கொழும்பு பகுதிகளில் சுவரொட்டி ஒட்டியுள்ளது. எந்த பெண்ணுமே விரும்பி விபச்சாரம் செய்வதில்லை. அவர்கள் அத் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர். அவர்களுக்கு வாழ வழிசெய்ய முடியாத சமூகத்திற்கு தண்டனை கொடுக்க என்ன தகுதி இருக்கிறது?

பெண்கள் மீது என்றுமில்லாத ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர். இது குறித்து பெண்கள் அமைப்புகள் எழுப்பும் குரல்களை அரசு மதிப்பதில்லை. வெள்ளைவானைக் காட்டி மிரட்டுகிறது.
விலைவாசி ஏறுகிறது. போதிய அபிவிருந்தி நிகழவில்லை. ஆட்சியாளர்கள் மக்கள் பணங்களை கொள்ளையடிக்கின்றனர். மாபெரும் மக்கள் போராட்டங்கள் எதிர்வரும் காலங்களில் நிகழ இருக்கின்றன. காலம் மாறும். வெள்ளை வானில் கோத்தா கும்பல் ஏற்றப்படும் நிலை நிச்சயம் தோன்றும். இது உறுதி.

No comments:

Post a Comment