• லெனின் நினைவிடத்தை ரஸ்சிய அரசு பெரும் செலவில் புனரமைத்திருப்பது மக்கள் மத்தியில் இருக்கும் லெனின் அவர்களின் அசைக்க முடியாத பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.
மாஸ்கோவில் லெனினின் உடல் வைக்கப்பட்டுள்ள நினைவிடம் இதுவரையில்லாத அளவுக்கு பெரிய அளவில் மீள் சீரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.
செஞ்சதுக்கத்தில் உள்ள கிரனைட் சமாதியின் அடித்தளத்தில் நீர் கசிந்தமையால் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அடித்தளத்தில் கான்கிரீட் கலவை செலுத்தப்பட்டு அது பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யப் புரட்சிக்குத் தலைமை தாங்கி நடத்திய லெனின் 1924 இல் இறந்தார். அதன் பிறகு அவரின் உடல் பாடம் செய்யப்பட்டது.கடந்த 1930ம் ஆண்டில் இருந்து அவரின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ரஸ்சியாவில் மீண்டும் கம்யுனிசத்தின் மீதான மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருவதால் தற்போதைய ரஸ்சிய அரசு வேறு வழியின்றி 2ம் உலகயுத்த வெற்றி விழாவை கொண்டாடுகிறது. தோழர் லெனின் நினைவிடத்தைப் புனரமைப்பு செய்து மக்கள் பார்வைக்கு விட்டுள்ளது. தோழர் லெனின் அவர்களின் பதப்படுத்தப்பட்ட உடலை அகற்றி புதைக்க வேண்டும் என அரசில் உள்ள அமைச்சர்கள் சிலர் கோரி வந்தனர். எனினும் லெனினுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு அவ்வாறு செய்ய விடாமல் தடுத்துள்ளது. இதனால் அரசு வேறு வழியின்றி தற்போது லெனின் நினைவிடத்தைப் புனரமைப்பு செய்து மக்கள் பார்வைக்கு விட்டுள்ளது.
ரஸ்சியாவில் மீண்டும் மாக்சிய தலைவர்களான லெனின், ஸ்டாலின் ஆகியோருக்கு அதிகரித்து வரும் செல்வாக்கு மக்கள் மத்தியில் மீண்டும் கம்யுனிசத்திற்கான ஆதரவு பெருகி வருவதைக் காட்டுவதாகவும் இது குறித்து சர்வதேச முதலாளித்துவம் அச்சமடைவதாகவும் செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன.

No comments:
Post a Comment