Tuesday, May 28, 2013

தமிழக அரசின் சீமான் மீதான வழக்கை கண்டிப்போம்.

• தமிழக அரசின் சீமான் மீதான வழக்கை கண்டிப்போம்.
• ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்களுடன் ஜக்கியப்படுவோம்.

நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் மீது பல விமர்சனங்கள் இருப்பினும் முக்கியமாக இரு விடயங்களுக்காக அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். முதலாவது யுத்த இறுதி கணங்களில் புலிகளின் தளபதி சூசை அவருடன் தொலை பேசியில் நிகழ்த்திய உரையாடலை வெளிப்படுத்தியது. இதன் மூலம் அக் காலத்தில் தமது தொலைபேசியை மூடிவைத்துவிட்டு பதுங்கியிருந்த சில தமிழ் தேசிய தலைவர்களை மக்கள் இனங்காண வைத்தார். இரண்டாவதாக காஸ்மீர் விடுதலை முன்னனி தலைவர் யாசின் மாலிக் அவர்களை அழைத்து வந்து கூட்டம் போட்டது. இதனை எதிர்ப்பதன் மூலம் சில போலி தமிழ் அதரவாளர்களின் தங்கள் உண்மை முகத்தை வெளிப்படுத்த வைத்துள்ளார்.

1983ல் மதுரையில் கலைஞர் டெசோ மாநாடு நடத்தினார். இதில் பி.ஜே.பி வாஜ்பாய் ,அத்வானி ஆகியோரையும் அழைத்து பேசவைத்தார். அப்போது பி.ஜே.பி பலமான அமைப்பு அல்ல. இருந்தும் இந்து அடிப்படைவாதிகளை அழைத்து பேச வைப்பதாக யாரும் கலைஞரை விமர்சிக்கவில்லை. ஆனால் இன்று காஸ்மீர் விடுதலை முன்னனி தலைவரை அழைத்து பேச வைத்ததற்காக சீமான் விமர்சிக்கப்படுகிறார். இது தமிழ் போலி ஆதரவாளர்களை இனங்காண வைத்துள்ளது.

யாசின் மாலிக் இந்திய உளவு நிறுவனத்தின் கைக்கூலி என சிலர் கூறுகின்றர். இன்னும் சிலர் அவர் சி.அய்.ஏ வின் கைக்கூலி என்கின்றனர். அவர் கைக்கூலியா அல்லது காஸ்மீர் மக்களின் பேராளியா என்பதை காலமும் காஸ்மீர் மக்களும் தீர்மானிப்பார்கள். ஆனால் அவர் ஒடுக்கப்பட்ட காஸ்மீர் மக்களின் பிரதிநிதியாக வந்து இன்னொரு ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்திற்து ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே ஒடுக்கப்பட்ட மக்களின் இந்த ஜக்கியம் குறித்து உண்மையில் மகிந்த ராஜபக்சவும் இந்திய அரசுமே கவலை கொள்ள வேண்டும். ஆனால் தாங்களும் தமிழ் ஆதரவாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் ஏன் கவலை கொள்கிறார்கள்?

ஒடுக்கப்பட்ட காஸ்மீர் மக்களுடன் மட்டுமல்ல இந்தியாவில் ஒடுக்கப்பட்ட அனைத்து சிறுபான்மை இனங்களுடனும் ஜக்கியப்பட வேண்டும் என தமிழ்நாடு விடுதலைப்படைத் தளபதி தோழர் தமிழரசன் கூறியுள்ளார். இந்தியாவில் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவையும் பெறவேண்டும். அவர்களுடன் ஜக்கியப்பட்டு போராட வேண்டும். இது ஒன்றே எமது வெற்றிக்கான வழியாகும். மற்றும்படி இந்திய அரசு கோவிக்கும் என்றோ அல்லது அமெரிக்கா விரும்பாது என்பதற்காகவோ ஒடுக்கப்பட்ட இனங்களுடன் ஜக்கியப்பட தயங்குவோமானால் நாம் ஒருபோதும் வெற்றியைப் பெறமுடியாது.

தாமும் தமிழ் ஆதரவாளர்கள் எனக் கூறிக்கொண்டு எமது வெற்றிக்கு தடையாக இருக்கும் போலி ஆதரவாளர்களை இனம் காண்போம். எதிரியைவிட ஆபத்தானவர்கள் இந்த போலி ஆதரவாளர்கள் என்பதை உணர்ந்து கொள்வோம்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருந்ததாக சொல்லி நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் மீது போடப்படும் வழக்குகளை கண்டிப்போம். தொடர்ந்தும் ஒடுக்கப்படும் அனைத்து சிறுபான்மை இனங்களுடனும் ஜக்கியப்படுவோம்.

No comments:

Post a Comment