Tuesday, May 28, 2013

• மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தேவை!

• மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தேவை!

உலகில் ஜந்தில் ஒரு பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுவதாக ஒரு கணிப்பு கூறுகிறது. அதுவும் இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சம் பெண்கள் இந்த கொடிய நோயால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்த மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும் என்றும் ஆனால் நோய் முற்றிவிட்டால் மரணம் தவிர்க்க முடியாதது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். துரதிருஸ்டவசமாக பெண்கள் போதிய விழிப்புணர்வு இன்மையால் ஆரம்பத்திலேயே இதனைக் கண்டறிந்து மருத்துவம் பெற தவறிவிடுவதுடன் வீணாக மரணத்தைத் தழுவுகின்றனர்.

அண்மையில் கொலிவூட் நடிகை ஏஞ்சலினா மார்பக புற்றுநோய் வரக்கூடும் என அஞ்சி தனது மார்பகங்களை அகற்றியது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு புகழ்பெற்ற நடிகை தனது சினிமா வாய்ப்பு பாதிக்கப்படுமோ என அஞ்சாது தனது மார்பகங்களை அகற்றியதுடன் அதனை மீடியாக்களுக்கும் தெரிவித்துள்ளார். அவரது தாயார் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததால் தனக்கும் இந் நோய் வரக்கூடும் என அஞ்சிய அவர் மருத்துவர்களின் ஆலோசனையுடன் இதனைச் செய்துள்ளார்.

மார்பக புற்று நோய் வருவது பரம்பரைக் காரணம் ஜம்பது வீதம் என்றாலும் கூட அவர் அது வந்த பின் குணமாக்குவது கடினம் என்பதை புரிந்து கொண்டு முதலே மார்பகத்தை அகற்றி அந்த கொடிய நோயின் ஆபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றியுள்ளார். அவரது இந்த செயல் உலகில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. இவருக்கு 3 குழந்தைகள் உண்டு. அதுமட்டுமல்ல மேலும் 5 ஏழைக் குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கிறார். அந்த குழந்தைகள் அனாதைகள் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவர் இவ்வாறு தனது மார்பகங்களை அகற்றி அந்த கொடிய நோயில் இருந்து தன்னை காப்பாற்றியுள்ளார். அவர் போல் எல்லா பெண்களும் இது குறித்து விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.

மார்பக புற்றுநோய் இருப்பதை தொடக்க நிலையில் கண்டறியும் “மம்மோகிரபி” என்னும் சோதனைக்கான செலவு கொஞ்சம் அதிகம்தான். அதனாலேயே வறிய பெண்கள் அந்த சோதனை செய்ய முடியாமல் உள்ளனர். எனவே அரசு இதனை இலவசமாக வழங்குவதுடன் இது குறித்து பெண்களுக்கு பாரிய பிரச்சாரம் செய்ய வேண்டும். பல்வேறு அமைப்புகள் இதனை பெண்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

லண்டனில் மனித உரிமை போராட்டங்களை முன்னெடுத்து வரும் முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் இக் கொடிய நோய் தாக்கியிருப்பதாக அறிய வருகிறது. எனவே நாளை உங்கள் தாயாருக்கோ அல்லது சகோதரிக்கோ ஏன் மனைவிக்கோ கூட வரலாம். எனவே உடனடியாக ஆரம்பத்pலேயே பரிசோதனை செய்து மருத்துவம் பெற்றுக்கொள்ள வழி செய்யுங்கள். அனைவரும் விழிப்புணர்வு பெற்றால் இந்த கொடிய நோயை எதிர்காலத்தில் கட்டுப்படுத்த முடியும்.

No comments:

Post a Comment