Tuesday, May 28, 2013

இது அறியாமையா ? அல்லது பணத் திமிரா?

இது அறியாமையா ? அல்லது பணத் திமிரா?

ஒரு பெண் வயசுக்கு வந்த நிகழ்வை கெலிகொப்டரில் பறக்க வைத்து ஆடம்பரமாக கொண்டாடிய புலம் பெயர் தமிழ் குடும்பம். இதை அறியாமை என்பதா அல்லது பணத் திமிர் என்பதா?

உலகம் பூராவும் தமிழர்கள் மட்டுமன்றி மனித உரிமையாளர், உணர்வாளர்கள் என்று பல்லாயிரக் கணக்கானோர் முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்திவரும் இந்த நேரத்தில் தமது பெண் வயசுக்கு வந்த நிகழ்வை பெரும் ஆடம்பரமாக தமிழ் குடும்பம் ஒன்று புலம்பெயர் நாடு ஒன்றில் கொண்டாடியுள்ளது. பல லட்சம் ரூபா செலவு செய்து நடத்தப்பட்ட இந்த பொறுப்பற்ற நிகழ்வு அனைவராலும் கண்டிக்கப்பட்டிருப்பது ஆறுதல் தருகிறது. இவ்வாறு கண்டிப்பதன் மூலமே இனியும் இதுபோன்ற நிகழ்வுகள் இடம்பெறாமல் தடுக்க முடியும்.

நாட்டில் வாழ வழியின்றி பல பெண்கள் குழந்தைகளுடன் தற்கொலை செய்கிறார்கள். சில முன்னாள் பெண் போராளிகள் விபச்சாரம் செய்வதாகக் கூட செய்திகள் வருகின்றன. இவ்வாறு நாட்டில் நிலைமை இருக்க அது பற்றி கொஞ்சம் கூட அக்கறை இன்றி பொறுப்பற்ற முறையில் நடைபெறும் இம்மாதிரியான நிகழ்வுகள் நிச்சயம் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறானவர்கள் சமூகத்தில் ஒதுக்கப்பட வேண்டும். அப்பதான் இம்மாதிரியாக நோய் பரவுவதை தடுக்க முடியும்.

தமிழகத்தில் பலர் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறக்கின்றனர். மாணவர்கள் தங்கள் வாழ்வை பணயம் வைத்து போராடுகின்றனர். ஆனால் புலத்தில் உள்ள சிலர் கொஞ்சம் கூட பொறுப்பற்ற தனமாக செலவு செய்வது மட்டுமன்றி தமிழ் இனத்தின் போராட்டத்திற்கே களங்கம் விளைவிக்கின்றனர்.

பெண் வயசுக்கு வருவது என்பது உடலில் எற்படும் ஒரு சாதாரண மாற்றம். அதற்கு இவ்வளவு பணம் செலவு செய்து ஆடம்பரமாக நிகழ்வு நடத்த வேண்டுமா? இந்த முட்டாள்தனத்தை போக்க ஒரு பெரியார் அல்ல ஆயிரம் பெரியார் பிறந்து வந்தாலும் இவர்களை திருத்த முடியாது. ஏனெனில் இவர்கள் சாதாரண முட்டாள்கள் அல்ல , உலகிலேயே மிகவும் மோசமான அடி முட்டாள்கள்!

இந்த நிகழ்வை பார்க்க விரும்புவோர் கீழ்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.

https://www.facebook.com/photo.php?v=243580605785191

No comments:

Post a Comment