Tuesday, December 9, 2014

புஸ்பராணி யின் “அகாலம்” ஒரு மூத்த பெண் போராளியின் நினைவு குறிப்புகள்

புஸ்பராணி யின் “அகாலம்”
ஒரு மூத்த பெண் போராளியின் நினைவு குறிப்புகள்.
"எவர்கள் இந் நாட்டின் வரலாற்றில் மறைக்கப்பட்டார்களோ அவர்களே இந்நாட்டின் வரலாற்றைத் திரும்பவும் எழுதுவார்கள்" - டாக்டர் அம்பேத்கார்
இன ரீதியாக ஒடுக்கப்பட்ட
சாதீ ரீதியாக தாழ்த்தப்பட்ட
பெண் என்ற ரீதியில் அடக்கப்பட்ட
ஈழப் போராட்டத்தில் முதன் முதலாக சிறை வைக்கப்பட்ட
பெண் போராளி புஸ்பராணியின் நினைவு குறிப்புகள்.
ஒடுக்கு முறைக்கு எதிரான எந்தப் போராட்டமும் வெற்றி பெறாமல் போகலாம். ஆனால் அது ஒருபோதும் தோல்வியடைவதில்லை. எமது போராட்டமும் ஏன் வெற்றி பெறவில்லை என்பதை நாம் கண்டறிந்தால் மட்டுமே எதிர்காலத்தில் வெற்றி பெற முடியும்.
எமது போராட்டத்தில் ஏற்பட்ட தவறுகளை கண்டறிவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது அனுபவங்களை நிச்சயம் வெளியிட வேண்டும். அந்த விதத்தில் சில புத்தகங்கள் வந்திருக்கின்றன. அதில் மூத்த பெண் போராளியான புஸ்பராணியின் “அகாலம்” ஒன்றாகும்.
ஆரம்பகால இயக்கங்களில் ஒன்றான “தமிழீழ விடுதலை இயக்கம்” பற்றிய தகவல்களை புஸ்பராணியின் இந்த நினைவுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. ஆனால் இது அந்த அமைப்பு பற்றிய ஒரு முழுமையான நூல் அல்ல. மாறாக பலரும் தமது அனுபவங்களை எழுதுவதற்கு இந்த நூல் நிச்சயம் தூண்டுகோலாக அமைகிறது என்பதால் இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு நூலாகும்.

No comments:

Post a Comment