Wednesday, December 31, 2014

அப்துல் ரவூப் தியாகத்தை போற்றுபவர்கள் தோழர் மாறன் தியாகத்தை போற்றுவதற்கு தயங்குவது ஏன்?

 அப்துல் ரவூப் தியாகத்தை போற்றுபவர்கள்
தோழர் மாறன் தியாகத்தை போற்றுவதற்கு தயங்குவது ஏன்?
1995ம் ஆண்டு ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டவர் அப்துல் ரவூப் அவர்கள்.
1988ம் ஆண்டு ஈழத்தில் இந்திய படைகள் செய்த கொடுமைகளுக்கு எதிராக கொடைக்கானல் டிவி டவருக்கு குண்டு வைத்து வீர மரணம் அடைந்தவர் தோழர் மாறன்.
அப்துல் ரவூப் போலவே தோழர் மாறனும் ஈழத் தமிழர்களுக்காகவே தனது உயிரை தியாகம் செய்தவர். இருவருடைய தியாகங்களும் போற்றப்படவேண்டியவை. ஆனால்,
• அப்துல் ரவூப் இன் தியாகத்தை போற்றுவோர் தோழர் மாறன் தியாகத்தை போற்றுவதற்கு தயங்குவது ஏன்?
• அப்துல் ரவூப் நினைவாக மாணவர் பாசறை அமைத்துள்ள “நாம்தமிழர்” சீமான் அவர்கள் தோழர் மாறன் பெயரைக்கூட உச்சரிக்க தயங்குவது ஏன்?
• அப்துல் ரவூப் ற்கு அஞ்சலி செலுத்திய வைகோ அவர்கள் இதுவரை தோழர் மாறனுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்?
• முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அப்துல் ரவூப்க்கு நினைவுச் சின்னம் வைத்த அய்யா நெடுமாறன் அவர்கள் தோழர் மாறனுக்கு நினைவு சின்னம் வைக்க மறுப்பது ஏன்?
• அப்துல் ரவூப் தியாகத்தை மதிப்பளித்த புலிகள் இயக்கம்கூட தோழர் மாறன் தியாகத்தை மதிப்பளிக்க தவறியது ஏன்?
இனியாவது
தோழர் மாறனை நினைவு கூருவோம்.
தோழர் மாறன் தியாகத்தை போற்றுவோம்
தோழர் மாறனுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்!

No comments:

Post a Comment