Sunday, January 18, 2015

• விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான இந்திய அரசின் தடை

• விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான இந்திய அரசின் தடை
விடுதலைப் புலிகள் இயக்கம் மீது வழக்கம்போல் இந்திய அரசு தடையை நீடித்துள்ளது.
வழமையாக ஒவ்வொரு இரண்டு வருடமும் தடையை நீடித்து வரும் இந்திய அரசு இம்முறை வழக்கத்திற்கு மாறாக 5 வருடம் தடையை நீடித்துள்ளது.
ஒருபுறம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாக இலங்கை, இந்திய அரசுகள் கூறிவருகின்றன. மறுபுறம் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீடிக்கின்றன.
புலிகள் அழிந்துவிட்டதாக கூறி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பிரபாகரன் மற்றும் பொட்டு ஆகியோரை நீக்கிய இந்திய அரசு மறுபுறத்தில் புலிகள் மீதான தடையை நீடிக்கிறது.
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் மக்களை அழித்த இலங்கை அரசுக்கு பெரும் உதவி புரிந்தது இந்திய அரசு. அந்த உண்மையை தமிழக மக்கள் உணர்ந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே புலிகள மீதான தடை நீடிக்கப்படுகிறது.
தமிழக மக்கள் இந்திய அரசின் சுயரூபத்தை இனங்கண்டு தமிழ்நாடு விடுதலையை முன்னெடுக்க கூடாது என்பதற்காகவே புலிகள் மீதான தடை நீடிக்கப்படுகிறது.
தமிழ்நாடு விடுதலையை முன்னெடுப்போரை நசுக்குவதற்காகவே புலிகள் மீதான தடை இம்முறை 5 வருடம் நீடிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கைது செய்யப்பட்ட தமிழ் உணர்வாளர்களை விடுதலை செய்யாமல் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைக்கவே விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழ் அகதிகளை தொடர்ந்தும் சிறப்புமுகாமில் அடைத்து வைப்பதற்காகவே புலிகள் மீதான தடை நீடிக்கப்படுகிறது.
தான் பதவிக்கு வந்தால் ஈழம் பெற்று தருவேன் என்ற ஜெயா அம்மையார் ஈழத் தமிழர்களை மட்டுமல்ல தமிழக உணர்வாளர்களையும் நசுக்குவதற்காகவே புலிகள் மீதான தடையை நீடித்துள்ளார்.
ஜெயா அம்மையாரின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள் இப்ப என்ன கூறப்போகிறார்கள்?

No comments:

Post a Comment