Saturday, January 31, 2015

பாம்பிற்கு பல்லில்தான் விஷம். ஆனால் “துக்ளக்” சோ விற்கு உடம்பெல்லாம் விஷம்!

பாம்பிற்கு பல்லில்தான் விஷம். ஆனால்
“துக்ளக்” சோ விற்கு உடம்பெல்லாம் விஷம்!
“சோ” தனது 21.01.15 துக்ளக் இதழில் “ முன்பு வால்டர் தேவாரம் திருப்பத்தூர் பகுதியில் நக்சலைட்டுகளை கடுமையாக அடக்கி ஒடுக்கினார். இப்போது மீண்டும் துளிர்விடப் பார்க்கிற இந்த மாவோயிஸ்டுக்களையும் கடுமையாக அடக்கி ஒடுக்க வேண்டும். அரசும், காவல்துறையும் மெத்தனமாக இருந்து விடமாமல் முழு வேகத்தில் செயல்பட வேண்டும்” என்று எழுதியுள்ளார்.
அதாவது முன்பு பொலிஸ் அதிகாரியாக இருந்த தேவாராம் நக்சலைட்டுகளை ஒடுக்குவதாக கூறி திருப்பத்தூர் பகுதிகளில் பல அப்பாவி தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களை கொன்று குவித்தது போல் இப்போதும் கொன்று குவிக்கும்படி “சோ” நஞ்சைக் கக்கியுள்ளார்.
அதுமட்டுமல்ல சிறையில் உள்ள மாவோயிஸ்க்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய கொண்டு வரும்போது அவர்களது ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் சந்திக்கின்றார்களாம். அதற்கு இடமளிக்க கூடாது என்றும் எழுதியுள்ளார்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். அப்படியானால் மாவோயிஸ்டுக்களை சட்டத்தின் முன் நிறுத்தி நீதிமன்றத்தின் மூலம் தண்டிப்பதற்கு மாறாக பொலிசாரை துப்பாக்கியால் சுட்டு அடக்கும்படி “சோ” வால் எப்படி கோரமுடியும்?
பொலிஸ் சட்டத்தை கையில் எடுப்பது சரியென்றால் அந்த பொலிஸ் அராஜகத்திற்கு எதிராக மக்கள் சட்டத்தை தமது கையில் எடுப்பது எப்படி தவறாகும்?
சட்டம் படித்த வக்கீல் என தன்னைக் கூறிக்கொள்ளும் “சோ” எப்படி பகிரங்கமாக இப்படி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும்படி பொலிசாரிடம் கோர முடிகிறது?
ஜெயா அம்மையாரின் அரசியல் தரகர் என்ற திமிரா? அல்லது சசிகலாவின் சாராய கம்பனியில் பங்குதாரர் என்ற அந்தஸ்தா? “சோ” தொடர்ந்தும் தமிழ் இனத்திற்கு எதிராக விஷம் கக்கி வருவதற்கு எது காரணம்?
கேரளாவில் இருந்து கொண்டு மலையாளிகளுக்கு எதிராக எழுதமுடியுமா?
கர்நாடகாவில் இருந்து கொண்டு கன்னடர்களுக்கு எதிராக எழுத முடியுமா?
மும்பையில் இருந்து கொண்டு மராட்டியர்களுக்கு எதிராக எழுத முடியுமா?
ஆனால் தமிழ் நாட்டில் இருந்துகொண்டு "சோ" வால் தமிழனுக்கு எதிராக எப்படி எழுத முடிகிறது?
தமிழன் “இளிச்சவாயன்” என்று “சோ” கருதுகிறாரா?

No comments:

Post a Comment