Sunday, January 18, 2015

முழந்தாளிட்டு வாழ்வதனைவிட எழுந்து நின்று மரணிப்பதனையே நான் விரும்புவேன் -Stéphane Charbonnier

முழந்தாளிட்டு வாழ்வதனைவிட எழுந்து நின்று மரணிப்பதனையே நான் விரும்புவேன் -Stéphane Charbonnier
• எல்லாம் வல்ல அல்லாவுக்கு பகிடி, வெற்றி தெரியாதா?
ஒரு நகைச்சுவைக்காக 12 பேரை கொலை செய்வதுதான் அல்லாவுக்கு விருப்பமா?
ஒரு நகைச்சுவை எல்லாம் வல்ல அல்லாவை களங்கப்படுத்த முடியுமா? அல்லது ஒரு நகைச்சுவைக்காக 12 பேரை கொல்வது அல்லாவை களங்கப்படுத்துமா?
என்னே கொடுமை இது? இதை இன்னும் எத்தனை நாளைக்கு அனுமதிப்பது?
• கடவுள் இருக்கு என்று கூற ஒருவருக்கு கருத்து சுதந்திரம் உண்டென்றால் கடவுள் இல்லை என்று கூற இன்னொருவருக்கு கருத்து சுதந்திரம் உண்டு.
கருத்து சுதந்திரத்தை கருவி கொண்டு அடக்க முற்பட்டால்
அப்புறம் சிந்திப்பதற்கே மனிதன் அச்சப்பட வேண்டியிருக்கும்.
• கம்யுனிசத்திற்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகளால் உருவாக்கப்பட்ட மத அடிப்படைவாத தீவிரவாதம் இன்று அந்த ஏகாதிபத்தியங்களையே விழுங்க ஆரம்பித்துள்ளது. ஆனாலும் பிற்போக்கு மதக் கருத்தக்களை மாக்சிய கருத்துக்களால் மட்டுமே எதிர் கொள்ள முடியும்.
• இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மட்டுமல்ல எல்லா மத அடிப்படைவாதிகளும் எதிர்க்கப்பட வேண்டியவர்களே. அவர்களை புரட்சியாளர்களால் மட்டுமே தோற்கடிக்க முடியும்.

No comments:

Post a Comment