Thursday, August 14, 2014

• மறக்க முடியாத யூலை படுகொலைகள்

• மறக்க முடியாத யூலை படுகொலைகள்

1983ம் ஆண்டு ஜே.ஆர் அரசின் தூண்டுதலால் பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக வெலிகடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் பலர் கொல்லப்பட்டனர். எமது தோழர் அழகன் என்ற சந்திரகுமாரும் அந்த கொல்லப்பட்டவர்களில் ஒருவர்.

அன்றைய இலங்கை அரசு இதனை “இனக்கலவரம்” என்றது. திருநெல்வேலியில் 13 இராணுவத்தினரை புலிகள் கொன்றதாலே இந்த கலவரம் உருவானதாகவும் கூறியது. ஆனால் 1956, 1977 என அதற்கு முன்னரும் பல முறை கலவரம் என்னும் பேரில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். அப்போது புலிகள் இயக்கம் இருக்கவில்லையே!

மேலும் 1983க்கு பின்னர் ஆயிரக்கணக்கில் இராணுவம் புலிகளால் கொல்லப்பட்டபோதும் கலவரம் வெடிக்கவில்லையே! எனவே இனவாத அரசுகள் தங்கள் நலன்களுக்காக காடையர்களை தூண்டிவிட்டனர் என்பதே உண்மையாகும்.

1983 கலவரத்தின்போது பல தமிழர்கள் சிங்கள மக்களால் பாதுகாக்கப்பட்டார்கள். பாணந்துறையில் வாழ்ந்த தமிழ் தோட்ட தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடந்தபோது ஒரு சிங்களவர் தனது உயிரைக் கொடுத்து அவர்களை காப்பாற்றியிருக்கிறார். அந்த தமிழ் மக்கள் ஒவ்வொரு வருடமும் அந்த சிங்கள மனிதரை நன்றியுடன் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

அதேபோல் தமிழ் பகுதியில் வாழ்ந்த பல சிங்களவர்களை தமிழ மக்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். கரவெட்டியில் நெசவு தொழிற்சாலையில் வேலை செய்த ஒரு சிங்கள குடும்பம் அவ்வூர் தமிழ் மக்களால் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டதை நானே கண்டிருக்கிறேன்.

1983 கலவரத்தையடுத்து 65 தொழிற்சங்கங்கள் கூடி அதனை வன்மையாக கண்டித்திருந்தன. பல்கலைக்கழகங்களில் ஜே.வி.பி யின் மாணவர் இயக்கமே பல தமிழ் மாணவர்களை காப்பாற்றியது. ஆனால் இலங்கை அரசு இனக் கலவரத்திற்கு சில இடதுசாரி இயக்கங்களே காரணம் எனக்கூறி ஜே.வி.பி உட்பட சிலவற்றை தடை செய்தது.

இனக் கலவரங்களை இலங்கை அரசு தடுக்காமையே பிரபாகரன்கள் உருவாகக் காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவே பகிரங்கமாக கூறினார். சமாதானத்தை கொண்டு வருவேன் எனக்கூறி சிங்கள மக்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்ற ஒரே ஜனாதிபதியும் அவரே.

இனஒடுக்குமுறையினாலோ அல்லது தமிழ் மக்கள் மீது ஒரு யுத்தம் என்னும் பேரில் பல்லாயிரக் கணக்கானோரை அழிப்பதாலோ எந்த பயனும் இல்லை என்பதை சிங்கள மக்கள் உணர வேண்டும்.

தமிழ் மக்களுடன் ஜக்கியமாக இருப்பதன் மூலமே சிங்கள மக்கள் சுதந்திரத்தையும் நல் வாழ்வையும் பெறமுடியும். இல்லையேல் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் இந்தியாவுக்கே அடிமையாகும் நிலை ஏற்படும்.

Photo: • மறக்க முடியாத யூலை படுகொலைகள்

No comments:

Post a Comment