Thursday, August 14, 2014

• கவிஞர் குட்டி ரேவதியுடன் ஒரு சந்திப்பு

இன்று (26.07.2014) மாலை 5 மணிக்கு லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் கவிஞர் குட்டி ரேவதியுடன் சந்திப்பு “தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம்” சார்பில் இடம் பெற்றது. “பெண்கவிதையும் சமூக மாற்றமும்” என்னும் தலைப்பில் சந்திப்பு நடைபெற்றது.

திரைப்பட விமர்சகர் யமுனா ராஜேந்திரன் அவர்கள் குட்டி ரேவதி குறித்த சுருக்கமான அறிமுகவுரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கவிஞர் மாதுமை தலைமை உரை நிகழ்த்தினார். அதன்பின்னர் குட்டி ரேவதி உரையாற்றினார். பின்னர் கலந்துரையாடலில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இறுதியாக தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் பௌசர் நன்றி கூறினார்.

லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேச கவிதை திருவிழாவில் பங்குபெற வந்திருக்கும் குட்டி ரேவதி இன்றைய இச் சந்திப்பில் கலந்து கொண்டு தனது அனுபவங்களையும் கருத்துகளையும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

சில அவதானிப்புகள்!

(1)”தமிழ்நாட்டை அதிகம் எதிர்பார்க்காதீர்கள். நம்பாதீர்கள்” என குட்டி ரேவதி பல தடவை குறிப்பிட்டார். இது தமிழ்நாட்டு ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் குறித்த அவரது பார்வையாக இருக்கும் என நம்புகிறேன். மாறாக, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவும் உதவியும் இன்றி ஈழத்தமிழர்கள் எப்படி தமது போராட்டத்தில் வெல்ல முடியும்?

(2)கலையை நாம் பயன்படுத்த வேண்டும் என்ற அவரது கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால் அந்த கலையை வழி நடத்தக்கூடிய அரசியல் குறித்து அவர் விரிவாக கூறாதது ஏமாற்றமே. மேலும் அவர் கட்சி அரசியலை மறுதலிக்கின்றாரோ என்ற சந்தேகத்தையும் அவரது உரை கொடுக்கிறது.

(3) குட்டி ரேவதி தனது உரையில் பல தடவை அம்பேத்கார் பெரியார் புத்தர் போன்றவர்களின் மேற்கோள்களை சுட்டிக்காட்டினார். அவர்கள் மாபெரும் அசான்கள்தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதிக வாசிப்பு கொண்ட குட்டி ரேவதி தனது உரையில் ஒரு தடவைகூட மாக்ஸ் பெயரை உச்சரிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் இலங்கையில் சாதீயத்திற்கு எதிராக தலைமை கொடுத்து போராடியது கம்யூனிசக் கட்சியே. எனவே ஈழத்து சாதீயத்தை படித்த குட்டி ரேவதி, அம்பேத்கார் போதனைகள் ஏன் ஈழத்தில் செல்வாக்கு பெறவில்லை என்பதை கண்டுகொள்ளாமல் இருந்திருப்பாரா?

Photo: • கவிஞர் குட்டி ரேவதியுடன் ஒரு சந்திப்பு

No comments:

Post a Comment