Sunday, August 31, 2014

சுதந்திரதின வாழ்த்து தெரிவிப்போரின் சிந்தனைக்கு!

• சுதந்திரதின வாழ்த்து தெரிவிப்போரின் சிந்தனைக்கு!

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம். இங்கு கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் இருக்கிறது என்று நம்புவர்களின் சிந்தனைக்கு சில வினாக்கள்.

(1) தெலுங்கானாவும் காஸ்மீரும் இந்தியாவில் பலவந்தமாக இணைக்கப்பட்டது என்ற உண்மையைக் கூறிய பாராளுமன்ற உறுப்பினருக்கு ஜாமீனில் வெளிவராத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதான் பேச்சு சுதந்திரமா?

(2) அரசுக்கு எதிராக முகநூல் மற்றும் இணையங்களில் எழுதுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்கிறார்கள். இதுதான் எழுத்து சுதந்திரமா?

(3) தர்மபுரியில் சாதி தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நக்சலைட்டுகள் என முத்திரை குத்தி தேசியபாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்திருக்கிறார்களே, இததான் கருத்து சுதந்திரமா?

இந்தியாவில் யாருக்கு இருக்கிறது சுதந்திரம்?

• தாங்கள் வாழும் காட்டை அழிக்க வேண்டாம் எனக் கோரிய மலைவாழ் மக்களை எந்தவித விசாரணையும் இன்றி சுட்டுக்கொல்வதற்கு பொலிசாருக்கு சுதந்திரம் உண்டு.

• கருப்பு சட்டத்தை நீக்கு எனக் கோரும் மணிப்பூர் பெண்களை கற்பழிக்க இந்திய ராணுவத்திற்கு சுதந்திரம் உண்டு.

• காஸ்மீரில் அப்பாவி முஸ்லிம்களை கொல்வதற்கு இந்தியபடையினருக்கு சுதந்திரம் உண்டு.

• தமிழக மீனவர்களைக் கொல்வதற்கு இலங்கை கடற்படையினருக்கு சுதந்திரம் உண்டு. அந்த கடற்படையினருக்கு பயிற்சி வழங்க இந்திய ஆட்சியாளர்களுக்கு சுதந்திரம் உண்டு.

• தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுக்க சுப்பிரமணியசுவாமிக்கு சுதந்திரம் உண்டு. அவருக்கு பொலிஸ் காவலும் உண்டு. ஆனால் அவருக்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுத்தால் அவர்களை பிடித்து அடைக்க தமிழக பொலிசுக்கு சுதந்திரம் உண்டு.

• கூலிப்படையை ஏவி கொலை செய்ய காஞ்சி சங்கராச்சாரிக்கு சுதந்திரம் உண்டு. அவரை விடுதலை செய்யவும், அப்பாவி பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கவும் இந்திய நீதிதுறைக்கு சுதந்திரம் உண்டு.

• கோடிக்கணக்கில் ஊழல் செய்யவும் வெளியில் சுதந்திரமாக திரியவும் ராசா, கனிமொழி வகையறாக்களுக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் பல வருடங்களாக சிறையில் வாடும் அப்பாவிகளுக்கு விடுதலை இல்லை.

• தீபெத் அகதிகள் சுதந்திரமாக இந்தியாவில் நடமாடலாம். ஆனால் தமிழ் அகதிகளை மட்டும் கொடிய சிறப்பு முகாமில் அடைத்து வைக்க தமிழக அரசுக்கு முழு சுதந்திரம் உண்டு.

தமிழா!
நீ அடிமையாக இருக்கிறாயா? சுதந்திரமாக இருக்கிறாயா?

Photo: • சுதந்திரதின வாழ்த்து தெரிவிப்போரின் சிந்தனைக்கு!

No comments:

Post a Comment