Thursday, August 14, 2014

இந்த முட்டாள்தனங்களுக்கு முடிவே இல்லையா?

• இந்த முட்டாள்தனங்களுக்கு முடிவே இல்லையா?

யாழ்ப்பாணத்தில் ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் தெருவுக்கு பல கோயில்கள் உண்டு. இந்துக் கோயில்கள் மட்டுமல்ல கிருத்துவ தேவாலயங்கள் பலவும் உண்டு. அங்கு முஸ்லிம் பள்ளிவாசல்கள் உண்டு. சில புத்த விகாரைகளும் உண்டு. எல்லாவற்றுக்கும்மேலாக சாதிகளுக்கும் தலா ஒரு கடவுள் உண்டு எனலாம்.

ஆனால் இத்தனை கோயில்கள் மற்றும் கடவுள்கள் இருந்தும் அவற்றினால் இலங்கை அரசு நிகழ்த்திய ஒரு படுகொலையைக்கூட தடுத்து நிறுத்த முடியவில்லையே! இது குறித்து இந்த முட்டாள்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?

இன்று நல்லூர் முருகனுக்கு இலங்கை ராணுவம் கெலிகொப்டரில் பூ மழை பொழிகிறது. ஆனால் இதே கெலிகப்டர்கள் அன்று தமிழ் மக்கள் மீது மட்டுமல்ல பல இந்து ஆலையங்கள் மீதும் கண்டு மழை பொழிந்தபொது இந்த நல்லூர் முருகனால் தடுத்து நிறுத்த முடியவில்லையே!

யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆலையம் கட்டுகிறார்கள். கட்டிய ஆலயத்திற்கு திரும்ப திரும்ப பெயின்ட் அடிக்கிறார்கள். பல இலட்சம் செலவு செய்து திருவிழா கொண்டாடுகிhர்கள். ஆனால் வன்னியில் இன்னொரு மூலையில் மக்கள் வீடு கட்டி தரும்படி இந்திய அரசிடம் பிச்சை எடுக்கிறார்கள். ரயிலுக்கு தண்டவாளம் போட்டு தரும்படி சீனா அரசிடம் கெஞ்சுகிறார்கள். ஊருக்கு ரோடு போட்டு தரும்படி மகிந்தவிடம் கேட்கிறார்கள். பாடசாலைக்கு கூரை போட்டு தரும்படி சிங்கள அமைச்சரிடம் மன்றாடுகிறார்கள். ஏன் இந்த அவல நிலை?

ஒரு புறத்தில் ஆலயத்தில் வீணாக தேங்காய் உடைக்கிறார்கள். இன்னொரு புறத்தில் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தனது குழந்தைகளை தாய் கிணற்றில் வீசிக் கொல்கிறாள். அதைவிடக் கொடுமை பரீட்சைக்கு காசு கட்டுவதற்காக வசதியின்றி இரண்டு சிறுவர்கள் திருடிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இது கொடுமையாக இந்த பக்தகோடிகளுக்கு ஏன் தெரியவில்லை?

நாட்டில்தான் இந்தகைய முட்டாள்தனங்கள் நடக்கிறது என்றால் புலம்பெயர்ந்த நாடுகளில் இதைவிட அதிகமான முட்டாள்தனங்கள் நடக்கின்றன. இவை ஏதோ படிக்காத மக்களின் முட்டாள் தனங்கள் அல்ல. பல பெரிய படிப்புகள் படித்த கனவான்களே இவ்வாறு செய்வது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும்பொது ஒரு பெரியார் மட்டுமல்ல ஓராயிரம் பெரியார் வந்தாலும் இந்த முட்டாள்தனங்களை இப்போதைக்கு நிறுத்த முடியாது என்றே தோன்றுகிறது.

Photo: • இந்த முட்டாள்தனங்களுக்கு முடிவே இல்லையா?

No comments:

Post a Comment