Tuesday, April 30, 2024

கலைஞர் குடும்பத்திற்கு 45000கோடி ரூபா சொத்து

கலைஞர் குடும்பத்திற்கு 45000கோடி ரூபா சொத்து எப்படி வந்தது என்று கேட்டால், கலைஞர் கதை வசனம் எழுதி சம்பாதித்தது என்று பதில் தருகிறார்கள். கலைஞர் கதை வசனம் எழுதி வெளிவந்த படங்கள் 54 என்கிறார்கள். அப்படியென்றால் ஒரு படத்திற்கு 835 கோடி ரூபா அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த காலத்தில் ஒரு படத்தின் மொத்த பட்ஜெட்டே ஒரு கோடி ரூபா வருவதில்லை. அப்படியிருக்க கலைஞருக்கு எப்படி 835 கோடி ரூபா கொடுத்திருக்க முடியும்? இதைக்கேட்டால் சீமானுக்கு வீட்டு வாடகை கட்ட பணம் எங்கிருந்து வருகிறது என்று கேட்கிறார்கள். கலைஞருக்கு எப்படி 45000 கோடி சொத்து வந்தது என்ற கேள்விக்கு சீமானுக்கு வாடகைப் பணம் எங்கிருந்து வருகின்றது என்பது உரிய பதில் இல்லை கூறினால் உடனே திராவிட மொழியில் திட்டுகிறார்கள். நான் தமிழன். எனக்கு திராவிட மொழி தெரியாது என்றால் நீ ஏன்டா நம்ம நாட்டு அரசியல் பேசுகிறாய் என்கிறார்கள். அவர்கள் இலங்கையில் வந்து மகிந்த ராஜபக்சாவுடன் கைகுலுக்கி பல்லாயிரம் கோடி ரூபாவை முதலீடு செய்யலாம். ஆனால் ஒரு தமிழன் தமிழ்நாட்டில் எப்படி அவர்கள் சொத்து சேர்த்தார்கள் என்பதைக் கேட்கக்கூடாதா? இது என்ன நியாயம்? ஆனால் உண்மையில் கலைஞர் குடும்ப சொத்து பற்றி கேட்டது நானோ அல்லது ஈழத் தமிழரோ இல்லை. கேட்டிருப்பவர் இந்தியர். அதுவும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி. எனவே இனியாவது திட்டாமல் ஒழுங்காக பதில் சொல்லுங்கள் உடன்பிறப்புகளே.

No comments:

Post a Comment