Monday, October 26, 2020

ராதிகா அம்மையாரின் உணர்வுகளை பாராட்டுகிறோம்!

•ராதிகா அம்மையாரின் உணர்வுகளை பாராட்டுகிறோம்! விஜய் சேதுபதி முரளி வேடத்தில் நடிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்கள் “வேலை அற்றவர்கள்” என நடிகை ராதிகா அம்மையார் தெரிவித்துள்ளார். சிங்கள அரசுக்கு ஆதரவான முரளியின் படம் வெளிவரவேண்டும் என ராதிகா அம்மையாரின் உணர்வுகளை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. ராதிகா அம்மையாரின் தாய் சிங்களம் என்கிறார்கள். ராதிகா அம்மையாரின் தாய் மொழி சிங்களம் சிங்களம் என்கிறார்கள். ராதிகா அம்மையாரின் தாய் நாடு இலங்கை என்கிறார்கள். அப்படியாயின் ராதிகா அம்மையார் தன் தாய் இனத்தின் மீதும் தன் தாய் மொழி மீதும் தன் தாய் நாட்டின் மீதும் கொண்டிருக்கும் பற்று உண்மையில் பாராட்டுக்குரியதே. அதுவும் தமிழ் நாட்டில் வந்து இருந்துகொண்டு, தமிழ்நாட்டில் பிழைத்துக்கொண்டு, தமிழன் சோற்றைத் தின்றுகொண்டு இத்தனை தைரியமாக தமிழர்களை “வேலை அற்றவர்கள்” என்று கூறுவது உண்மையில் பாராட்டுக்குரியது. அவர் முதலில் ஒரு மலையாள நடிகரை திருமணம் செய்தார் என்கிறார்கள். அடுத்து ஆங்கிலேயரை திருமணம் செய்தார் என்கிறார்கள். அதன்பின்னர் ஒரு தமிழ் நடிகரை திருமணம் செய்தார் என்கிறார்கள். இந்த அம்மையார் எத்தனை திருமணம் செய்தார் என்பதல்ல மாறாக எத்தனை திருமணம் செய்தாலும் அவர் தன் தாய் மொழி, இனம் மீதான பற்றை விட வில்லை என்பதே கவனிக்க வேண்டிய விடயம் ஆகும். இனியாவது இந்த அம்மையாரைப் பார்த்தாவது தமிழர்களுக்கு தம் இனம் மீது, தம் மொழி மீது. தம் நாட்டின் மீது பற்று வர வேண்டும். கர்நாடகாவில் போய் இருந்துகொண்டு யாராவது கன்னடர்கள் வேலை அற்றவர்கள் என்று கூறமுடியுமா? அல்லது கூறிவிட்டு கர்நாடகாவில் இருந்துவிட முடியுமா? இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே வந்து இருந்துகொண்டு தமிழனுக்கு எதிராக கருத்து சொல்ல முடியும். ஏனெனில் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று தமிழன் பெருமையாக நினைப்பதை இவர்கள் பலவீனமாக பார்க்கிறார்கள். குறிப்பு – ராதிகா அம்மையார் முரளி படத்தை ஏன் தன் சிங்கள மொழியில் எடுத்து இலங்கையில் திரையிடக்கூடாது?

No comments:

Post a Comment