Monday, October 26, 2020

குமிழி – நாவல் அறிமுகம்!

குமிழி – நாவல் அறிமுகம்! புளட் இயக்கத்தில் இருந்த ரவி என்னும் போராளியால் எழுதப்பட்டு விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் நாவல் இது. நாவல் என்றாலும்கூட இது ஒரு ஆவணமாக கருத்தக்கூடிய வகையில் இருக்கின்றது. இதுவரை வந்த எழுத்துக்கள் பெரும்பாலும் புலிகள் செய்த சகோதரப்படுகொலை பற்றியே வந்திருக்கின்றன. ஆனால் இந் நாவலில் புளட் இயக்கம் செய்த சகோதரப்படுகொலை பற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சுழிபுரத்தில் ஏழு புலிப் போராளிகள் புளட் அமைப்பினரால் கொல்லப்பட்டு அவர்களின் ஆணுறுப்பு வெட்டி வாயில் செருகி புதைக்கப்பட்ட சம்பவம் கூறப்பட்டிருக்கிறது. மேலும் இந்திய புலனாய்வு அமைப்பானது ஈழ விடுதலை இயக்கங்களுக்குள் எந்தளவு ஊடுருவி சீரழித்தன என்பதும் இந் நாவலில் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்திய ராணுவ வீரர் ஒருவர் புளட் இயக்கத்தில் மத்திய கமிட்டி உறுப்பினராக இருந்திருக்கிறார் என்பதையும் அவர் பின்னர் இந்திய அமைதிப்படையுடன் வந்து திருகோணமலையில் இருந்து செயற்பட்டதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதையறிந்த இலங்கை அரசு அந்த நபர் இலங்கை வருவதை தற்போது தடை செய்திருப்பதையும் இந் நாவல் பதிவு செய்திருக்கிறது. தராக்கி சிவராம் புளட் இயக்கத்தில் இருந்தபோது செய்த கொலைகள் பற்றியும் பின்னர் அவர் புலி ஆதரவாளராக ஊடகவியலாளராக இருந்தபோது புளட் இயக்கத்தால் கொழும்பில் கொலை செய்யப்பட்டதும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் சிவராமுக்கு முன்னர் இதே கொழும்பில் தலைவர் உமா மகேஸ்வரன் புளட் இயக்கத்தைச் சேர்ந்த சிலரால் கொல்லப்பட்ட விடயம் ஏன் இந்த நாவலில் குறிப்பிடப்படவில்லை என்பது புரியவில்லை. இது ஒரு நாவல். அதுவும் ஒரு சாதாரண போராளியாக மிகவும் சொற்ப காலங்கள் இருந்தவரால் தன் அனுபவங்களை தொகுத்து எழுதப்பட்டுள்ளது. எனவே இதில் புளட் இயக்க கதைகள் முழுவதும் இடம் பெறும் என எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும் இது பல முன்னாள் புளட் போராளிகளுக்கு ஒரு உந்துதலைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. அவ்வாறு பலரும் எழுத முன்வரும்போது புளட் அமைப்பின் போராட்டம் பற்றிய பல விடயங்கள் மக்கள் அறியக்கூடியதாக இருக்கும் குறிப்பாக, பிரபாகரன் கொலைகள் குறித்து விமர்சித்து புதியபாதை அமைத்த புளட் இயக்கம் பின்னர் அது எப்படி ஒரு கொலைகார இயக்கமாக மாறியது என்பதற்குரிய விடை அப்போது கிடைக்கும் என்று நம்புவோமாக. கலகம் செய்ய துணிந்தவனுக்கு உதவி செய்வதாகவே இலக்கியம் இருக்க வேண்டும் என்று மார்க்சிம் கார்க்கி கூறுகிறார். அவர் எழதிய தாய் நாவல் இன்றுவரை அவ்வாறே இருக்கிறது. அதேபோல் ஈழப் போராட்டம் பற்றிய பதிவுகள் இன்னொரு போராட்டம் முன்னெடுப்பதற்கு உதவுவதாக இருக்க வேண்டும். அதாவது நாம் திரும்பிப் பார்ப்பது முன்னோக்கி சரியாக நகருவதற்காக என்பது ஒவ்வொரு எழுத்தாளர் மனதிலும்; இருக்க வேண்டும். 151 You, கமலா பாலன், Giri Mary and 148 others 48 com

No comments:

Post a Comment