Friday, July 31, 2015

இது நடக்குமா?

 இது நடக்குமா?
(1)ஒரு வருடத்திற்குள் தீர்வு பெற்று தருவொம் என சம்பந்தர் அய்யா கூறுகின்றார். அவ்வாறு பெற முடியாவிடின் ஒரு வருடம் முடிந்ததும் அனைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
(2)அனைத்து பேச்சுவார்த்தை விபரமும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சுமந்திரன் தன்னிச்சையாக இரகசியமாக அரசுடன் பேசுவதை தடை செய்ய வேண்டும்.
(3) தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கு முன்னர் ஆட்சியில் பங்கெடுக்க கூடாது. குறிப்பாக அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள கூடாது.
(4)கைதிகள் விடுதலை, மீள் குடியேற்றம், காணாமல் போனோர் பற்றிய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால் மட்டுமே அரசியல் தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைககு வர முடியும்; என்று முன் நிபந்தனை விதிக்க வேண்டும்.
(5)தாம் விரும்பியவர்களை எம்.பி களாக தெரிவு செய்யவும் விரும்பாத போது திரும்ப பெறவும் மக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படல் வேண்டும்.
(6)எம்.பி கள் குறைந்தது 300 நாட்களாவது தமது சொந்த தொகுதியில் இருக்க வேண்டும். அவர்களது குடும்பமும் அதே தொகுதியில் வசிக்க வேண்டும். அவர்களது சொத்து விபரம் மக்கள் முன் வைக்கப்படல் வேண்டும்.
(7)எம்.பி கள் தமது சம்பளத்தை கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். கட்சியே அவர்களது தேவைக்குரிய பணத்தை வழங்க வேண்டும். வாகன பர்மிட் மூலம் வரும் ஒரு கோடி ரூபா பணத்தையும் தொகுதி மக்களுக்கே செலவு செய்ய வேண்டும்.
(8)தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ, புளட், ஈபிஆர்எல்எவ் இயக்கங்கள் யாவும் கலைக்கப்படல் வேண்டும். அவ் அமைப்புகளின் சொத்துகள் யாவும் மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
(9)தமிழ்தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்படல் வேண்டும். அதில் அனைத்து தமிழ் கட்சிகளையும் உள்; வாங்க முயற்சி செய்ய வேண்டும்.
(10)தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மாவட்ட, தொகுதி, கிளைப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படல் வேண்டும். ஒருவருக்கு ஒரு பதவி என்ற ரீதியில் கட்சி பொறுப்பு வகிப்பவர்களுக்கு பாராளுமனற, மாகாண சபை பதவிகள் வழங்கக்கூடாது.
தமிழ்மக்களின் நலனுக்காகவே தாம் கட்சி நடத்தவதாக கூறும் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கண்ட மக்கள் நலன் சாhந்த விடயங்களை நிறைவேற்ற முன்வருமா?
தமிழ் மக்களே!
வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் இதனை கேளுங்கள்.
இது நடக்க முடியாத விடயங்கள் அல்ல.
மக்கள் நினைத்தால் இவை யாவும் நடக்கக்கூடியவையே!

No comments:

Post a Comment