Friday, July 31, 2015

வரலாறு உன்னை விடுதலை செய்யும் !

வரலாறு உன்னை விடுதலை செய்யும் !
ஓ! பேரறிவாளனே!
எங்களை மன்னித்துவிடு. உனக்காக எங்களால் பரிதாபப்படத்தான் முடிகிறதேயொழிய இன்னும் உன்னை விடுதலை செய்ய முடியாதவர்களாகவே இருக்கிறோம்.
நீ எமக்காக இரக்கப்பட்டாய். அதற்காக உன் இளமை வாழ்வையே தொலைத்தவிட்டு நிற்கிறாய்.
நீ விரும்பியிருந்தால் மற்றவர்போல் நல்ல சம்பளத்துடன் ஒரு கம்பனியில் வேலை செய்திருக்கலாம்.
நீ விரும்பியிருந்தால் மற்றவாகள் போல் ரஜனி படத்தை விசில் அடித்து ரசித்து வாழ்க்கையை ஓட்டியிருக்கலாம்.
ஆனால் நீயோ எமக்காக இரக்கப்பட்டாய். எமக்கு உதவி செய்ய உன் வாழ்க்கையை அர்ப்பணித்தாய்.
உனக்காக குரல் கொடுக்க வேண்டிய எமது தலைவர்களோ தக்கு பதவி வேண்டி தேர்தல் போட்டியில் பிசியாக இருக்கிறார்கள். உனக்காக குரல் கொடுக்க அவர்களுக்கு தற்போது நேரம் இல்லை.
தமது பிள்ளைகளை சொகுசாக வெளிநாட்டில் வாழவைத்துவிட்டு ஊரான் பிள்ளையை போராட வைத்த இந்த தலைவர்கள் உனக்காக கவலைப்படத்தான் போகிறார்களா என்ன?
66 கொடி ஊழல் செய்த ஜெயா அம்மையாருக்கு நாலு வருடம் தண்டனை வழங்கப்ட்டபோதும் 22 நாளில் அவருக்கு ஜாமீன் விடுதலை வழங்கிய உச்ச நீதிமன்றம் 22 வருடம் கழிந்த பின்னரும் உனக்கு நீதி வழங்க மறுக்கிறது.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்.
இந்திய நீதிமன்றம் உனக்குரிய நீதியை வழங்க மறுக்கலாம்.
ஆனால் மக்கள் உனக்குரிய நீதியை நிச்சயம் வழங்குவார்கள்.
ஆம். வரலாறு உன்னை விடுதலை செய்யும்.
இப்படிக்கு 
உனக்காக பரிதாப்படும்
ஒரு அப்பாவி ஈழத்து தமிழன்.

No comments:

Post a Comment