Friday, July 31, 2015

இந்த அவலத்தை என்னவென்று அழைப்பது?

 இந்த அவலத்தை என்னவென்று அழைப்பது?
தமிழக மாணவர்கள் தமிழீழமே தீர்வு என்று தீர்மானம் போடுகின்றார்கள். ஆனால் ஜக்கிய இலங்கைக்கள் தீர்வு என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு கூறுகிறது.
முல்லைப்பெரியாறு அணைக்கு புலிகளால் ஆபத்து என்றதற்கு எதிராக தமிழகமே எதிர்ப்பு குரல் எழுப்புகின்றது. ஆனால் புலிகளின் எச்சங்களைக்கூட சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று சம்பந்தர் அய்யா கூறுகிறார்.
தமிழகத்தில் உள்ள உணர்வாளர்கள் புலிக்கொடி ஏந்தி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள். ஆனால் சம்பந்தர் அய்யா சிங்க கொடி ஏந்தி காட்டிக் கொடுக்கிறார்.
புலத்தில் உள்ளவர்கள் போர்க்குற்ற விசாரணை வேண்டி போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் சம்பந்தர் அய்யா போர்க்குற்றவாளிகளுடன் விருந்துண்டு கூடிக் குலாவுகின்றார்.
யுத்தத்தின் வெற்றிக்கு இந்தியாவின் உதவியே முக்கிய காரணம் என்று பசில் ராஜபக்ச கூறுகின்றார். ஆனால் தமிழ் மக்களை கொன்று குவிக்க உதவிய இந்தியாவுக்கு ஆதரவாக சம்பந்தர் அய்யா குரல் கொடுக்கின்றார்.
யுத்தம் முடிந்து 6 வருடங்களாகிவிட்டது. இன்னமும்
• கைதிகள் விடுவிக்கப்டவில்லை
• அகதிகள் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை
• காணமல் போனோர் கண்டு பிடிக்கப்படவில்லை
• ராணுவத்தின் பாலியல் வல்லுறவுகள் நிறுத்தப்படவில்லை
இந்நிலையில் மீண்டும் தமக்கு வாக்களித்தால் 1 வருடத்தில்; தீர்வு பெற்று தருவோம் என எந்த முகத்துடன் சம்பந்தர் அய்யா கோருகிறார்?
1 வருடத்தில் தீர்வு பெற்று தரவில்லையாயின் தன் பதவியை இராஜினாமா செய்வேன் என எழுதி தர சம்பந்தர் அய்யா தயாரா?
எத்தனை தடவை தமிழ்தேசிய கூட்டமைக்கு வோட்டு போட்டும் 
அத்தனை தடவையும் தமிழ் மக்கள் கண்ட பயன் என்ன?

No comments:

Post a Comment