Friday, July 31, 2015

அப்துல் கலாம் மரணம்!

• அப்துல் கலாம் மரணம்!
மன்னிக்கவும். என்னால் அனுதாபம் கொள்ள முடியவில்லை.
அப்துல் கலாமிற்கு சிலர் வீர வணக்கம் செலுத்துகின்றனர். அது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அப்துல் கலாமிற்கு சிலர் அஞ்சலி செலுத்துகின்றனர். என் இனத்தை அழித்த சிங்கள தலைவர்களுடன் அவர் கைகுலுக்கியதை மறந்து அஞ்சலி செலுத்தும் அளவிற்கு எனக்கு பெருந்தன்மை இல்லை.
அப்துல் கலாம் தமிழர் என்பதால் சிலர் அனுதாபம் கொள்கின்றனர். அவர் தனது பதவிக்காலத்தில் தமிழர்களுக்கு என எதுவும் செய்யவில்லை. எனவே அதை எல்லாம் மறந்து என்னால் அனுதாபம் கொள்ள முடியவில்லை.
அப்துல் கலாம் என்ற அறிவியல் மேதையை இழந்து விட்டோம் என சிலர் துடிக்கின்றனர். ஸ.டீபன் கிங் என்ற அறிவியல் மேதை லண்டனில் இருக்கிறார். அவர் தனது அறிவின் மூலம் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக பரப்புரை செய்வது போல் அப்துல் கலாம் ஒருபோதும் தனது அறிவினை கடவுள் நம்பிக்கைக்கு எதிராக பரப்புரை செய்ததில்லை. எனவே அவரது இழப்பிற்காக என்னால் துடிக்க முடியவில்லை.
அப்துல் கலாம் ஒரு முஸ்லிம். ஆனால் அவர் கண் முன்னே குஜராத்தில,பம்பாயில் என பல இடங்களில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது இவர் மௌனமாகவே இருந்தார். அதனால்தான் இந்துமத வெறியர்களால் அவர் ஜனாதிபதியாக்கப்பட்டார்.
அப்துல் கலாமை பதவிகள் தேடி வந்தன என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அவர் பதவியை தக்க வைக்க சங்கராச்சாரியாரை தேடிச் சென்று வணங்கியதை இவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்என்று புரியவில்லை? ஒரு அறிவியல் மேதை எதற்காக கொலைகார சங்கராச்சாரியாரை தேடிச் சென்று வணங்க வேண்டும்?
அப்துல் கலாம் மனிதாபிமானம் மிக்கவர் என்கிறார்கள். அவரது இராமேஸ்வரம் மீனவர்கள் தமது குறைகளை தெரிவிக்க டில்லி சென்ற போது அவர்களை சந்திக்க மறுத்தவர். கூடங்குளம் மக்களை சந்திக்க மறுத்தது மட்டுமல்ல அந்த அணு உலை பாதுகாப்பானது என பொய் அறிக்கை கொடுத்தவர். இதுவா சிறந்த மனிதாபிமானம்?
சதீஸ்கரில் ஆதிவாசிகளை கொல்லப்படுவது குறித்து அக்கறையற்றவர்கள்
இந்தியாவில் மாடுகள் கொல்லப்படுவது குறித்து அனுதாபப்படுபவர்கள்
அப்துல் கலாம் மரணம் குறித்து அனுதாபப்படுவது வியப்பு அல்ல.
ஆனால் இவர்கள் போல் என்னால் அனுதாபப்பட முடியவில்லை.
மன்னித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே!

No comments:

Post a Comment